சிவாலயங்களில் செய்யத்தகாதன1.
குளிக்காமல் ஆலயத்திற்குள் செல்லக் கூடாது
2. மேல் வேட்டி, சட்டை முதலிய அணிந்து செல்லக் கூடாது
3. சிரித்தல், சண்டையிடல், வீண் வார்த்தைகள் பேசல், உறங்கல் கூடாது
4. சிவனார்க்கும், நந்தி தேவருக்கும் குறுக்கே செல்லுதல் கூடாது
5. பலிபீடத்திற்கும், சன்னிதிக்கும் இடையே போதல் கூடாது
6. அபிஷேகம் நடக்கும் போது உட் பிரகாரத்தில் வலம் வரல் கூடாது
7. வழிபாட்டை அவசரமாக நிகழ்த்தல் கூடாது
8. சுவாமிக்கு நேராக காலை நீட்டி வணங்கல் கூடாது
9. ஈரமான ஆடை அணிந்து செல்லுதல் கூடாது, மயிர் கோதி முடித்தல் கூடாது
10. பாதரட்சை, குடை முதலியன எடுத்துச் செல்ல கூடாது
சிவாலய தரிசன விதிமுறை
1. நீராடி, தூய உடை அணிந்து,
திருநீறு, உத்திராக்கம் முதலியன அணிந்து செல்லவும்
2. வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மலர்கள் வழிபாட்டுக்கென கொண்டு
செல்லலாம்.
3. முதலில் ஆலய கோபுரத்தை வணங்க வேண்டும்
4. கொடிமரத்தின் முன்னே, ஆண், தலை, மோவாய், இரு கைகள், இரு புயங்கள்,
முழந்தாளிரண்டு ஆகிய எட்டும் நிலத்தில் படுமாறு அஷ்டாங்க நமஸ்காரம்
செய்ய வேண்டும். பெண், தலை, இரு கைகள், இரு முழங்கால்கள் ஆகிய ஐந்தும்
நிலத்தில் படுமாறு பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
5. கொடிமரத்தின் எதிரில் வணங்கிய பின் நந்தி தேவரிடம் மானசீகமாக விடை
பெறுதல் அவசியம்
6. நந்தி தேவரிடம் விடை பெற்றுக்கொண்ட பிறகு வினாயகரை ஒரு முறையும்,
சிவ பெருமானை ஐந்து முறையும், அம்பாளை நான்கு முறையும், நவக்கிரகத்தை
ஒன்பது முறையும் வலம் வந்து வணங்க வேண்டும்
7. சமயாச்சாரியார்கள், நடராசப் பெருமான், பிற தெய்வங்கள் யாவற்றையும்
வணங்கிவிட்டு, இறுதியாக சண்டேச்வர நாயனாரை அடைந்து, மும்முறை கைகளால்
தாளாமிட்டு, சிவதரிசன பலனை தந்து அருளும்படி வேண்டுதல் அவசியமாகும்.
8. அதன்பின், கொடிமரத்தின் அருகில் வடக்கு முகமாக அமர்ந்து
திருஐந்தெழுத்தை 108 முறை தியானித்தல் வேண்டும்
9. இறுதியாக பைரவரை வணங்கி, சிவச் சொத்து எதையும் எடுத்துச் செல்ல
வில்லை என்று உறுதி கூறி கோயிலை விட்டு வெளியே வருதல் வேண்டும்
சுய நலமின்மையே உண்மையான சமயப் பற்றுக்கு சான்றாகும்.
ஒருவன் தன்னலமின்றி எவ்வளவுக்கு பிறருக்கென வாழ்கிறானோ, அந்த அளவிற்கு
அவன் ஆத்ம ஞானம் பெற்று சிவபெருமான் அருகே இருக்கும் அருகதை பெறுகிறான்.
திருச்சிற்றம்பலம்