Home             Page 2     Housing System          Temples of Nanjil Vellala Pillai           Origin of Pillai

கிருஷ்ணன்

என்.எஸ்.கிருஷ்ணன்

"கலைவாணர்' என்று தமிழகம் பெருமையுடன் அழைக்கும் நகைச்சுவை மன்னர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகர்கோவில் ஒழுகினசேரியில் நவ.,29, 1908ல் பிறந்தார். நான்காம் வகுப்புடன் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வறுமையில் வாடிய இவர், நாடகக் கொட்டகைகளில் சோடா கலர் பானம் விற்றுப் பிழைத்தார்.

அப்போது அவரைக் கவர்ந்தது நாடகக் கலை. 1925ல் டி.கே.எஸ்., சகோதரர்கள் நாடகக் குழுவில், 17வது வயதில் சேர்ந்தார். 1935ல் டி.கே.எஸ்., சகோதரர்களின், "மேனகா' திரைப்படம், இவரது புகழை மேலும் வலுவடையச் செய்தது.

சிறந்த சிந்தனையாளர், மனிதாபிமானி, கொடைவள்ளல், நகைச்சுவை அரசு என்றெல்லாம் பாராட்டப்பட்டவர்.

1955ல் தென்னிந்திய நடிகர் சங்கம் இவருக்கு "கலைவாணர்' என்ற பட்டம் அளித்து பாராட்டியது. தமிழக மக்களைக் குலுங்க குலுங்க சிரிப்பில் ஆழ்த்திய நகைச்சுவை மன்னர் ஆக., 30, 1957ல் காலமானார்.
Please also refer
www.kalaivanar.com

 

 

 

 

ஏ.சி.சுந்தரம் பிள்ளை(படேல் சுந்தரம் பிள்ளை)
நாகர்கோவில் பொது வாழ்வில் பெரும் பங்கு கொண்ட முதுபெரும் அறிஞர் படேல் சுந்தரம் பிள்ளை, கொல்லம் ஆண்டு 1085ல் பிறந்தவர். இவரது தொழில்நுட்பத் திறனைப் பாராட்டி லண்டன் தொழில் கல்வி நிலையத்தார் 1935ல் இவருக்கு எப்.சி.ஐ., பட்டம் வழங்கினர். தீண்டாமை ஒழிப்பு, மதுவிலக்கு இயக்கங்களில் தீவிரமாக ஈடுபட்டவர். கன்னியாகுமரி மாவட்டத்தின் சமீப 50 ஆண்டுக்கால வரலாற்றை ஆவணங்களோடு சேர்த்து வைத்துள்ளார்.

 

தேரூர் சிவன்பிள்ளை
எஸ்.சிவன் பிள்ளை 

கவிமணி பிறந்த தேரூரில் டிச., 21, 1910ல் பிறந்தவர்

காந்திஜியின் தண்டியாத்திரையால், கல்லூரியில் படிக்கும் போதே உத்வேக முற்று, கல்லூரியில் கொடி ஏற்றியவர். 

1933ல் சட்டப் படிப்பு முடித்து நாகர்கோவிலில் வழக்கறிஞரானார். பின்னர் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

டாக்டர் எம்.இ.நாயுடு உடன் 1930-40 வரை சேர்ந்து நாஞ்சில் நாட்டில் அரிஜன சேவைகளில் தீவிரமாக உழைத்தார். 

1938, 1939 ஆண்டுகளில் கைதியாக 14 மாதங்களுக்கு மேல் சிறை வாழ்க்கை. 

1942 போராட்டத்தில் ஏழு மாத சிறை அனுபவித்தார்.

இவர் மீது ஜன., 6, 1947ல் சுசீந்தரம் தேரில் கொடி ஏற்றியதற்காக கிரிமினல் வழக்கு போடப்பட்டது.

குடும்பத்துடன் 1946ல் சென்னையில் காந்திஜியைச் சந்தித்தார் சிவன் பிள்ளை. இதன் எதிரொலியாக வக்கீல் தொழிலை விட்டு விட்டுத் தேரூரில் கஸ்தூரிபாய் ஆதாரப்பள்ளியைத் தொடங்கினார்; இன்று அது நடுநிலைப்பள்ளி. 

1950 முதல் 1952 வரை இரண்டாண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராயிருந்தார்.

 

 

தோவாளை சுந்தரம் பிள்ளை
தோவாளை சுந்தரம் பிள்ளை (1903 - 1961) பழந்தமிழர் கிராமியக் கலைகளில் ஒன்றான வில்லுப் பாட்டுக் கலைஞர் ஆவார். வில்லுப் பாட்டு வழிவழியாய் பல புலவர்களால் பாடப் பெற்று 20ம் நூற்றாண்டில் சிறந்து விளங்கியது. வில்லுப் பாட்டு என்று குறிப்பிடும் போது தோவாளை சுந்தரம் பிள்ளை முதலிடம் பெற்று விளங்கினார். பின்னாளில் வந்த புலவர்களெல்லாம் தோவாளை சுந்தரம் பிள்ளையை வழிமுறையாகக் கொண்டு வணக்கம் சொல்லி ஆரம்பிப்பது வழக்கமாய் இருக்கிறது. வில்பாவலர், ரேடியோ ஸ்டார் என்று பட்டங்கள் பெற்று விளங்கினார்.
தேரூர் ஆண்டார் பிள்ளையை குருவாகக் கொண்டு வில்கலையை வளர்த்தார் எனினும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு தமிழ் இலக்கியங்கள், புராண இதிகாசங்களைக் கையாண்டு தனித் தன்மையோடு விளங்கினார். பெண்கள், ஆண்கள், இளவயதினர், முதியோர் என அனைத்துத் தரப்பினரும் அவர் சொல்லழகில் மயங்கிக் கட்டுண்டு கிடப்பர். கோயில் கொடை விழா என்று இல்லாமல் தமிழ் சங்கம் பொது விழாக்களிலும் அவர் தீந்தமிழ் விரும்பி ரசிக்கப்பட்டு வந்தது. பொருளாதார மேதை டாக்டர் நடராஜன், பேராசிரியர் இலக்குவனார் போன்ற தமிழ் ஆர்வலர்களோடு நெருங்கிய உறவு வைத்ததோடு அவர்களால் பாராட்டப்பட்டார். வில் பாவலர் சுந்தரம் பிள்ளை குழுவில் சேர்ந்து பக்க வாத்தியங்கள் இசைப்பதைப் பெருப் பேறாகக் கருதினார்கள் பக்க மேளக்காரர்கள். அண்ணாவி என்று அவர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். இவரோடு இணைந்தவர்கள் பிற புலவர்கள் அழைத்தாலும் போக மாட்டார்கள். சுருங்கக் கூறின் பக்க மேளக் காரர்களுக்கு வேலை குறைவாகவே இருக்கும். ஏனெனில் அவர் சொல் அலங்காரத்தில் மக்கள் கட்டுண்டு கிடப்பதால் பாட்டுக்க நேரம் குறைவாகவே கிடைக்கும்.
தந்தை வேலாயுதம் பிள்ளை, தாய் இராமலட்சுமி இவர்களுக்கு புதல்வராய் தோவாளையில் அவதரித்தார். முழுப் பெயர் கடம்பவன சுந்தரம் பிள்ளை, பின்னர் கே சுந்தரம் பிள்ளை என்று வழங்கலாயிற்று. இவருக்கு கைலாசம் பிள்ளை, பூதலிங்கம் பிள்ளை என்று இரு சகோதரர்கள். கைலாசம் பிள்ளையும் வில்லுப் பாட்டுக் கலை பயின்று பாடி வந்தார். பூதலிங்கம் பிள்ளை சிறந்த தமிழ் வித்துவான், உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் பல இலக்கியங்களை படைத்துள்ள சிறந்த எழுத்தாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமாவார். மூன்று சகோதரிகளும் இருந்தனர். திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தமிழ் நாட்டின் பிற மாவட்டங்களுக்கும் இடைவிடாது கலைப் பணியாற்றச் செல்ல வேண்டியிருந்தமையால் தேரேகால் புதூர் என்னும் ஊருக்கு இடம் மாறினார். இவர் திருச்சி மற்றும் திருவனந்தபுரம் வானொலி நிலையங்களில் வில்லிசை நிகழ்ச்சி நடத்தி உள்ளார்.
இந்துக் கல்லூரியில் வில்லிசை வேந்தர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. நாகர்கோவிலில் 1957ல் இந்து சமயம் மற்றும் தமிழ் ஆராய்ச்சி மாநாடு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. டாக்டர் நடராஜன், இலக்குவனார், தெ பொ மீ, சமயத் தலைவர்கள் என்று பல் துறை அறிஞர்கள் பங்கு பெற்று மிகச் சிறப்பாக ஒரு வாரம் நடை பெற்றது. அந்த பெரும் சபையில் வில்லிசை நிகழ்ச்சி நடத்தி அறிஞர்களால் பாராட்டப்பட்டார்.
நாஞ்சில் நாடு மட்டும் அன்றி தமிழகம் முழுவதும் மற்றும் தமிழ் கூறும் அன்றைய திருவிதாங்கூர் தேசத்திலும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. பழகிய யாவரும் அவரை உறவு சொல்லியே வருவது வழக்கமாக இருந்தது. இப்போதும் அவர் வழி வந்த சந்ததியினரை அவர் கலைத் துறை ஆட்கள் சந்திக்க நேர்ந்தால் உறவு முறை சொல்லியே அறிமுகப் படுத்திக் கொள்வர். பொருள் சேர்ப்பதில் நாட்டம் இல்லாமல் இருந்தார். இறை நம்பிக்கையால் அருளும் அன்பும் சேர்த்து வைத்துள்ளார்.

தமிழுக்கும் கலைக்கும் தன் வாழ்வை அர்ப்பணித்து மத்திய வயதிலேயே உலகை நீத்தார் இறுதியா திருநெல் வேலி மாவட்டம் தனக்கர் குளத்தில் (வடக்கன் குளம்) கோயில் விழாவில் கலைப் பணி ஆற்றிக் கொண்டு இருக்கும் போதே உயிர் நீத்து, கலையோடு ஐக்கியமானார். சென்னையில் நடந்த கிராமீயக் கலைவிழா, சேலத்தில் நடந்த பொருட்காட்சி ஆகியவற்றிலும் தன் குழுவினருடன் பங்கேற்றுப் பெருமை பெற்றார். இவரைப் பற்றிய பிற அறிஞர்களின் கருத்து தொல் பொருள் ஆய்வாளர் "டாக்டர் பத்மநாபன்" தன்னுடையக் கட்டுரையில் கீழ்வருமாறு கூறி உள்ளார்: "தோவாளை சுந்தரம் பிள்ளை வில்லுப் பாட்டில் பல புரட்சிகளை செய்துள்ளார். சதாவதானி செய்குத்தம்பிப் பாவலரிடம் தமிழ்ப் பயிற்சி பெற்றமையால் அவரால் இனியமையாகவும் மனதை உருக்குமாறும் பாடல்கள் இயற்றிப் பாட முடிந்தது.

நாஞ்சில் நாட்டில் வழக்குச் சொல் ஒன்று உண்டு. அதாவது, சொல்லுக்கு சுந்தரம், வில்லுக்கு கோலப்பன், பேய்க்கு நாராயணன். அதன் பொருள் சுந்தரம் பிள்ளை சொற்சுவைக்கு பேர் போனவர். விற்கலையை சுந்தரம் பிள்ளை மக்களிடம் தேசிய உணர்வு ஊட்ட ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். காந்திய வழியைப் பின்பற்றிய அன்னார் எப்போதும் தூய கதராடையை அணிவார். அவர் பின்னால் பெரும் ரசிகர் கூட்டம் எப்போதும் கூடியிருக்கும்." பிரபல தமிழ் எழுத்தாளர் சுந்தர ராமசாமி வாயிலாக தெரிய வருவதாவது: "லண்டனைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜான் டிவே (John Dewey) 1957ம் ஆண்டு நாஞ்சில் நாட்டில் விஜயம் செய்துள்ளார். அன்னார் ஆதிசங்கரருடைய தத்துவம் பற்றிப் பல புத்தகங்களை எழுதியவர். அவர் தோவாளை சுந்தரம் பிள்ளையினுடைய வில்லுப் பாட்டை ஒரு மணி நேரத்துக்கு BBC ரேடியோவுக்காகப் பதிவு செய்து சென்றுள்ளார்."

 

 

பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன்
பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன் 

நாகர்கோவில் வடசேரியில் பிப்., 18, 1926ல் பிறந்த பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம், உலகப்புகழ் பெற்ற தமிழ் அறிஞர்.

நெல்லை, திருவனந்தபுரம், கேரளப் பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பணியாற்றியவர். 

1981ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர். 

நாகர்கோயிலில் வடசேரியில் 1926 ல் பிறந்த வ.அய்.சுப்ரமணியம் ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் புகுமுகவகுப்பும் இளங்கலையும் படித்துவிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் தமிழில் முதுகலை முடித்தார். 

அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலையில் மொழியியலில் முனைவர் பட்டம் பெற்றார். 

மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, எஸ்.வையாபுரிப்பிள்ளை ஆகியோரைப்போல திருவனந்தபுரத்தில் நெடுநாள் பணியாற்றினார். 1965 வரை கேரள பல்கலைகழகத்தில் தமிழ்த்துறைத்தலைவராக இருந்தார்.

மேலைநாட்டு பல்கலைகழகங்களில் நடக்கும் தமிழாய்வுகளை எல்லாம் தமிழகத்தில் ஒருங்கிணைக்கவும் அந்த தரத்திலான தமிழாய்வுகள் இங்கே நடக்கவும் ஓர் உலகத்தரமான பல்கலைக் கழகம் தேவை என்று உணர்ந்த எம்ஜியார் தஞ்சை தமிழ்பல்கலைகழகத்தை ஆரம்பித்தார்.

1981ல் தஞ்சை தமிழ்பல்கலைகழகத்தின் நிறுவன துணைவேந்தராக பணியாற்ற ஆரம்பித்த வ.அய்.சுப்ரமணியம் 1986ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டபோது அப்போதைய அரசியலாளர்களால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

அவர் உயர்பதவிகளில் இருந்தமையால் எப்போதுமே அவரைத்தேடி வருபவர்களிடம் மிக எச்சரிக்கையாக இருப்பார். நம்மவர்கள் இரண்டாம் சந்திப்பிலேயே சிபாரிசு கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். 

பல்வேறு உயர்பதவிகளை வகித்த வ.அய்.சுப்ரமணியம் தன் ஊதியத்துக்குமேல் எதையுமே ஈட்டியரவல்ல. தன் குடும்ப சொத்தான ஓட்டுவீட்டில் சாதாரணமாக குடியிருந்தார். 

அ.கா.பெருமாள் வ.அய்.சுப்ரமணியம் அவர்களைப்பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். வ.அய்.சுப்ரமணியம் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் எந்தவிதமான முறைமையும் இல்லாமல் முழுமையான வாசிப்பு இல்லாமல் விருப்பப்படி தமிழாராய்ச்சி செய்வதன்மேல் ஒருவகையான பொறுமையின்மை கொண்டிருந்தார். அத்தகையவர்களை அவர் நெருங்கவே விடுவது இல்லை. அதேசமயம் உண்மையான ஆய்வாளர்களுக்கு மிக இனியவராக ஆகி நெருங்குவ்து அவர் இயல்பு. 

அ.கா.பெருமாள் வ.அய்.சுப்ரமணியம் அவர்களுக்கு அண்மையானவராகவே இருந்தார். எம்.ஜி.ஆர்தஞ்சை தமிழ்பல்கலைக் கழகத்தை வ.அய்.சுப்ரமணியம் அவர்களின் ஆலோசனைப்படி அவரை முன்னிறுத்தியே தொடங்கினார். உலகத்தரமான ஒர் தமிழாய்வு நிறுவனமாக தஞ்சை தமிழ்பல்கலையை உருவாக்க வ.அய்.சுப்ரமணியம் அவர்களால் முடிந்தது. அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியை சுந்தர ராமசாமி அவரது ஒரு கட்டுரையில் சொல்கிறார். பல்கலை துணைவேந்தராக வ.அய்.சுப்ரமணியம் பொறுப்பேற்று அமர்ந்திருக்கும்போது எம்.ஜி.ஆர் அவரைச் சந்திக்க பல்கலைக்கு வந்தார். எம்ஜிஆர் வரும்செய்தி வ.அய்.சுப்ரமணியத்துக்கு அறிவிக்கப்பட்டது. வ.அய்.சுப்ரமணியம் வாசலுக்கு வந்து எம்.ஜி.ஆர்ரை சந்தித்து வரவேற்க வேண்டும் என்று சில சொன்னார்கள். மரபுப்படி துணைவேந்தர் கவர்னரை மட்டுமே அப்படி வரவேற்க வேண்டும், மரபுகளை மீறக்கூடாது என்று வ.அய்.சுப்ரமணியம் மறுத்துவிட்டார். அதை எம்.ஜி.ஆரும் புரிந்துகொண்டார்.

குப்பம் திராவிடப் பல்கலைக்குப் பொறுப்பேற்று தமிழாய்வுக்கும் தென்னிந்தியப் பண்பாட்டாய்வுக்கும் அவர் அரும்பணியாற்றியிருக்கிறார். கிட்டத்தட்ட தஞ்சை பல்கலை செய்ய நினைத்ததை அவர் குப்பம் திராவிட பல்கலையில் செய்து முடித்தார். இன்று தமிழ் பண்பாட்டாய்வில் முக்கியமான எல்லா நூல்களும் குப்பம் திராவிடப் பல்கலை வெளியீடாக வந்தவையே

வ.அய்.சுப்ரமணியம் அவர்களின் பங்களிப்பு - மரபான தமிழறிஞராக இருந்தாலும் அவர் அமெரிக்க பல்கலையில் பயின்றவர். ஆகவே முறைமை மீது அழுத்தமான பற்று கொண்டவர். தமிழாய்வை அறிவியல் விதிகளின்படி மட்டுமே நடத்தவேண்டும் என்பதில் மிகுந்த பிடிவாதத்துடன் இருந்தார். தமிழாய்வு என்றால் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்துதல் என்ற சமவாக்கியம் இருந்த சூழலில் இந்த அறிவியல் அணுகுமுறையே அவர் தமிழுக்கு அளித்த பெரும் கொடை.

இந்நோக்கு மொழி ஆய்வில் அறிவியல் அடிப்படையை என்றுமே வலியுறுத்திய எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களிடம் இருந்து அவர் பெற்றுக்கொண்டது. வ.அய்.சுப்ரமணியம் அவர்களின் ஆழமான தமிழ்ப்பற்றுதான் தமிழாய்வுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணிக்கச் செய்தது. ஆனால் வ.அய்.சுப்ரமணியம் அந்த தமிழ்ப்பற்று தன் ஆய்வுக்கு குறுக்கே வர அனுமதித்தவரல்ல. இந்த நடுநிலைமை தமிழாய்வில் என்றும் தேவையாக இருக்கக் கூடிய ஒன்று. தன் மாணவர்களில் அந்த நோக்கை வலியுறுத்தி பயிற்றுவித்தது தமிழில் ஒரு மரபை உருவாக்கியது.

வ.அய்.சுப்ரமணியம் அவர்கள் 29-6-2009 அன்று காலமானார். 

 

கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளை
கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளை நவ., 16, 1914ல் பிறந்தவர். விவசாயிகளின் உற்ற நண்பர். அப்போது அரசாங்கத்தின் நிலம், மகாராஜாவின் நிலம், மகாராஜா குடும்பத்தாரின் நிலம், பத்மநாப சுவாமிக்கான நிலம் எனப் பாகுபாடு செய்யப்பட்டு, அதற்குத் தனித்தனியான நில வரி கள் விதிக்கப்பட்டன. பண்டார வகை, ஸ்ரீ பண்டாரவகை, ஸ்ரீபாத வகை, கண்டு கிரிஷி இப்படி வரி களுக்குப் பெயர். நாஞ்சில் நாட்டின் பெரும் நிலங்கள் பத்மநாப சுவாமிக்கு என ஒதுக்கப்பட்டு அதற்கு, ‘மணி யகரம்’ என்ற வரி மிக அதிகப்படி யாக வசூலிக்கப்பட்டது. இதை எதிர்த்து ஏப்., 3, 1949ல், ‘மணியகரம் கண்டன மாநாடு’ ஒன்றை கடுக்கரையில், நீதிபதி சத்யநேசன் தலைமையில் நடத்தி, மாநாட்டைக் கவிமணி திறந்து வைத்தார். பெரும் அளவில் விவசாயிகள் தங்கள் சொந்தப் பிரச்னைக்காக கூடிய முதல் மாநாடு அது. மணியரகம் நிலவரியில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை விடுவிக்க 18 ஆண்டு போராடி வெற்றி கண்டவர். கடுக்கரை உயர் நிலைப்பாடசாலை உருவாகக் காரணமாக இருந்தவர். குமரி மாவட்ட விவசாயிகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பியவர்.

 

 

 

டாக்டர் எஸ்.முத்துக் கருப்பப்பிள்ளை
கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பிறந்த தேரூரில் ஏப்., 23, 1909ல் பிறந்தவர் எஸ்.முத்துக் கருப்பப்பிள்ளை. 1932ல் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றார். தான் பிறந்த சிறிய கிராமத்தில் 1933லேயே ஒரு மருத்துவமனையை நிறுவி, அங்கேயே பணி செய்தார். மாநில, அகில இந்திய மருத்துவக் கழகங்கள் பலவற்றின் உறுப்பினர். இந்தியாவின் பல மருத்துவ மாநாடுகளிலும், 1976ல் கனடா மருத்துவ மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். 1948ல் மகாத்மா காந்தி தேசிய நினைவு நிதி அமைப்பாளர். 1944ல் இருந்து மூன்று ஆண்டுகள் ஸ்ரீமூலம் சட்டமன்ற உறுப்பினர். 1957ல் தீண்டாமை ஒழிப்புக்கான தமிழ்நாடு அரசின் தங்கப் பதக்கம் பெற்றார்.

 

உமைதாணு பிள்ளை
கவிமணியின் தேரூரில் பிறந்தவர் உமைதாணு பிள்ளை. சென்னை சென்று வயர்லஸ் பிரிவில் படித்துக் கொண்டிருக்கும்போதே (1939-40) பத்திரிக்கைகளில் எழுதி வந்தார். பின்னர் முழுநேரப் பத்திரிக்கையாளரானார்.
"தினமலர்' 1952ல் திருவனந்தபுரத்தில் தொடங்கிய கால முதல் செய்திப் பிரிவில் உதவி ஆசிரியராக இருந்து, இப்போது ஓய்வு பெற்றுள்ளார்.
இவரது பல நாடகங்கள், வானொலியில் ஒலிபரப்பாகி உள்ளன.
பல புத்தகங்கள் எழுதிய இவர் நல்ல ஹாஸ்யப் பேச்சாளர்.
நாஞ்சில் நாடு தமிழகத்துடன் இணைய நடந்த போராட்டத்தில், தீவீர பங்கு பெற்றவர்.

 

 

 

 

 

எம்டன்\\\' ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை
நாஞ்சில் நாட்டு வீரன் `எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை

நம் இனத்திலிருந்து  உலகம் போற்றிய உன்னத மகவு ஒன்றை தமிழகம் ஈன்றெடுத்தது. சின்னச்சாமி - நாகம்மாள் என்ற சாதாரண ஏழைத்தாய்- தந்தையருக்குப் பிறந்த அம் மாவீரன், பின்னாளில் ஜெர்மனியின் சர்வாதிகாரி, உலக நாடுகளையெல்லாம் குலைநடுங்க வைத்த ஹிட்லரையே தலைவணங்க வைத்தான் என்ற வரலாறு எத்தனை பேருக்குத் தெரியும்?

"ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடிமைப்பட்ட மக்கள் உலகின் எந்தக் கோடியில் இருந்தாலும் அங்கே சென்று, அவர்களின் அடிமைத் தளைகளைத் தகர்த்தெறிவேன்" எனச் சூளுரைத்த அந்த நாஞ்சில் நாட்டு வீரன்தான் `எம்டன்' ஜெய்ஹிந்த் செண்பகராமன்.

1914 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22 ஆம் நாள் எம்டன் என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணித்து, சென்னையிலுள்ள செயின்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தகர்க்க வெடிகுண்டு வீசிய பெருவீரன்தான் செண்பகராமன் .

இந்த அளவில் மட்டும்தான் செண்பகராமன் குறித்த வரலாறு நமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் மேலாக இந்திய நாட்டின் விடுதலைக்காக வெளிநாடுகளில் அவன் மேற்கொண்ட முயற்சிகளும், அதனால், அவன் பட்ட வேதனைகளும் மறைக்கப்பட்டுவிட்டன அல்லது மறக்கப்பட்டுவிட்டன.

தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்காகக் காந்தியடிகள் நடத்திய போராட்டத்திற்குச் சற்றும் குறையாமல், அமெரிக்கப் பேரரசின் இனவெறியில் சிக்கி நாள்தோறும் செத்துப் பிழைத்த நீக்ரோ மக்களுக்காகக் குரல் கொடுத்தார், அருந்தமிழ்ப் புதல்வன் செண்பகராமன்.

அப்போதைய அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சனைச் சந்தித்து, கறுப்பின மக்களின் துயரங்களை எடுத்துரைத்தார். "பெரும்பான்மை மக்களின் கருத்திற்கு மாறாக தாம் நடந்து கொள்ள இயலாது" என்று உட்ரோ வில்சன் மறுத்துரைத்துவிட்டார். இருந்தும் சோர்வுபடாமல், தன்னைக் கொலை செய்யக் காத்திருக்கும் இனவெறியர்களின் மிரட்டலை மீறி, செண்பகராமன் ஊர் ஊராகச் சென்று நீக்ரோ மக்களைச் சந்தித்துத் தனது வலிமையான கருத்துப் பிரசாரத்தை நடத்தினார்.

முதலாம் உலகப்போர் தொடங்கிய 1914 ஆம் ஆண்டு, இந்தியாவிற்கு வெளியே, ஜெர்மன் மன்னர் கெய்சரின் ஆதரவோடு முதன் முதலாக `இந்திய தேசியத் தொண்டர் படை' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். செண்பகராமன் வழி நடத்திய ஐ.என்.வி. என்ற இந்திய தேசியத் தொண்டர் படையின் பேராற்றலைக் கண்டு பிரிட்டிஷ் அரசு கலக்கம் அடைந்தது. வங்கச் சிங்கம் சுபாஷ் சந்திரபோஷின் ஐ.என்.ஏ. இதற்கு செண்பகராமன் அமைத்திருந்த ஐ.என்.வி.யே முன்னோடியாக அமைந்திருக்கிறது.

1933 ஆம் ஆண்டு வியன்னாவில் நடைபெற்ற மாநாட்டில் சுபாஷும் செண்பகராமனும் நாட்டு விடுதலை குறித்து ஆராய்ந்த போது, செண்பகராமன் வகுத்துத் தந்த திட்டம் சுபாஷ் சந்திரபோஸைக் கவர்ந்தது ஒன்றே இதற்குச் சான்று.

இந்திய நாட்டின் விடுதலையைத் தனது உயிர் மூச்சாய்க் கொண்ட இம்மாவீரன், தென்னாபிரிக்காவிற்கும் பயணம் மேற்கொண்டு அங்குள்ள கறுப்பின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தார். கென்யாவில் டாக்டர் செண்பகராமன் நிகழ்த்திய வரலாற்றுச் சிறப்புமிக்க பேருரையைப் பற்றிக் கேள்விப்பட்ட காந்தியடிகள், அவரைப் பெருமையோடு பாராட்டியிருக்கிறார்.

ஜவஹர்லால் நேரு தனது சுயசரிதையில், "நாஜிகளுடன் கலந்து, சற்றும் பயமின்றிப் பணிபுரிந்த சொற்ப இந்தியர்களில் செண்பகராமன் முதன்மையானவர்" என்று புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

"விடுதலை பெறக்கூடிய தகுதி இந்தியர்களுக்குக் கிடையாது" என்று சொன்னதற்காக ஹிட்லரிடம், இந்தியா பற்றியும் அதன் தலைவர்கள் குறித்தும் ஆணித்தரமான தகவல்களைக் கூறி செண்பகராமன் வாதம் புரிந்தார். அவரின் கூர்மையான வாதத்திறமைக்கு முன்னர் ஹிட்லரின் பேச்சு எடுபடாத காரணத்தால், எழுத்து மூலமாக செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார் ஹிட்லர். ஜெர்மன் நாஜிகளுக்கு இந்தச் சம்பவம் எரிச்சலூட்டிய காரணத்தால், செண்பகராமனைக் கொலை செய்யத் திட்டம் தீட்டி உணவில் விஷம் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்றனர். 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் அவரது அன்பு மனைவி இலட்சுமி பாயின் மடியில் உயிர் துறந்தார்.

  தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.
இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல் என் உயிர் பிரியத்தான் போகிறது. எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிடு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது

"சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்" என்ற ஜெர்மன் மன்னர் கெய்சரின் விருப்பம் நிறைவேறாமற் போனாலும், "சுதந்திர இந்தியாவில், நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் எனது சாம்பலைத் தூவ வேண்டும்" என்ற செண்பகராமனின் விருப்பம் மட்டும் 1966 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19 ஆம் நாள் இந்திய அரசின் உதவியோடு நிறைவேறியது.

உலக நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்து, உலகத் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவின் விடுதலைக்காக ஆதரவு திரட்டிய செண்பகராமன் என்ற பெருமகனின் வரலாறு, மிக விரிவான அளவில் ஆராயப்பட்டு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என அனைத்து நிலையிலும் உள்ள பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள் செண்பகராமனின் தியாகத்திற்கும் அவர் தம் குடும்பத்தாருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டும்.

 

தசாவதானி பி. ஆறுமுகம் பிள்ளை


தசாவதானி பி. ஆறுமுகம் பிள்ளை

குமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அருகிலுள்ள கோட்டாறு என்ற ஊரில் திரு. பிரமநாயகம் பிள்ளை என்ற சிவ பக்தருக்கும் ,திருமதி தென்கரைப் பிள்ளை என்ற அம்மையாருக்கும் ஒரே மகனாக 7 -3 -1892 அன்று பிறந்தார்.

இவர் சிறு வயதிலேயே திருகுறள்,மூதுரை, சிலப்பதிகாரம்,தொல்காப்பியம் , நன்நூல்,தேவார திருமுறைகள் போன்ற 53 நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

இவர் நாகர்கோவில் இடலாக்குடியில் வசித்த தசாவதானி மேதகு செய்குத்தம்பிப் பாவலர் அவர்களின் சீடராக இருந்து தசாவதானம் கற்றுக் கொண்டார்.

தசாவதானி அவர்கள் நெல்லை மாவட்டம் ஏர்வாடி என்ற நகரத்தில் தனது முதல் அவதானத்தை தன் குரு தலைமையில் முதல் அவதானத்தை, 29 ஆவது வயதில் செய்தார்.

கொழும்பு ,நெல்லை, தூத்துக்குடி,சென்னை போன்ற பல இடங்களில் 30 அவதானங்கள் செய்துள்ளார்கள்.

ஆறுமுகனார் திருவாடுதுறை ஆதீன முதல் சைவப் பிரசாகராக பத்து வருடங்களுக்கு மேல் பணியாறறினர்கள்.

தசாவதானியார் தாணுச்சதகம், சேர மண்டலச்சதகம்,குசேல வெண்பா எனற நூல்களை இயறறி உள்ளார்.

 

 

டி.எஸ்.இராமசாமி பிள்ளை
டி.எஸ்.இராமசாமி பிள்ளை

தேரூரில், ஜூன் 8, 1918ல் பிறந்த டி.எஸ்.ராமசாமி மிகச் சிறந்த தேசபக்தர். தொழிற் சங்கத் தலைவருமாவார். 

இலட்சுமணபுரி பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., எல்.எல்.பி., இறுதி ஆண்டு படிக்கும்போது பல்கலைக்கழக மாணவர்களால் காங்கிரஸ் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

ஆக., 1942ல் "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது மாணவர்கள் காங்கிரஸ் தலைவரான இவர் கைது செய்யப்பட்டு ஐந்து மாத பாதுகாப்புக் கைதியானார். இதனால் கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் சோசலிஸ்ட் ஜெயபிராஷ் நாராயணனின் பேரன்பைப் பெற்றவர். பின்னர் அதுவே பிரஜா சோசலிஸ்ட் கட்சியானது. அதைத் திருவிதாங்கூரில் பிரபலமாக்கியவர்களில் முக்கியமான தலைவர் இவர். 

பி.சோ., கட்சி சார்பில் 1952ல் சட்ட மன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து '54, '57லும் வெற்றி பெற்றார். பட்டம் சர்க்கார் தமிழர்களை நசுக்க முற்பட்டது. தன்கட்சி ஆட்சியில் இக்கொடுமை நடப்பதைக் கண்டு கொதித்துப் பட்டத்தை எதிர்த்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்து அதில் வெற்றியும் பெற்றார்.

பல தொழிற் சங்கங்களின் தலைவர். அவர்களுக்காகப் போராடி வெற்றியும் கண்டவர். 1957ல் தமிழகச் சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்துக்கல்லூரியின் ஆட்சிக் குழுத் தலைவராக இருந்துள்ளார்.

 

 

 

டாக்டர் ப. நடராஜன்
பொருளாதார மேதை டாக்டர் ப. நடராஜன்
 
B. Natarajan was an Indian politician and former Member of the Legislative Assembly.
He was elected to the Tamil Nadu legislative assembly as an Indian National Congress candidate from Kanyakumari constituency in Kanyakumari district in 1962 election. and his native place is asramam near suchindrum he was an landlord .

 

 

 

 

M .சுசீந்திரேசே பிள்ளை


M .சுசீந்திரேசே பிள்ளை

நாஞ்சில் நாடு தாலுகா புத்தேரியில் ' வலியவடு மருதக விலாசம் ' முத்துவேல் பிள்ளை, அகஸ்தீசுவரம் தாலுகா மைலாடி சேந்தன் புதூர் பெருமாப்பிள்ளை என்ற செல்லம்மை நாச்சியார் தம்பதினருக்கு 13 - 3 -1923 அன்று சுசீந்திரேசன் பிறந்தார். பிற்காலத்தில் அவர் 'சேந்தன் புதூர் செல்லப்பன்' என்றும் அழைக்கப்பட்டார்.

அவர் சிறு பருவத்தில் வடசேரில் உள்ள பள்ளியில் ஆறாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது இந்திய சுகந்திர போராட்டம் தீவிரமடைந்திருநத நேரம், குமரி மாவட்டத்தில் போராட்டம் ஆர்ப்பாட்டம், மறியல் முதலியன நடப்பதோடு தெருவில் தேச பக்தர்கள் கதர் ஆடை, காந்திக் குல்லா அணிந்து தெருத் தெருவாக பாரதியார் பாடல்களை பாடிக்கொண்டு செல்வதைப் பார்த்த சிறுவன் சுசீந்திரேசனுக்கு தானும் அந்தக் கூட்டங்களில் இனைத்து செல்ல வேண்டும் எனற ஆர்வம் ஏற்பட்டது.

மேலும் இவரது தந்தை வழிப் பாட்டனர்ர்,சுசீந்திரேசே பிள்ளை அந்தக காலத்தில் சென்னை சென்று F A படித்தவர். காங்கிரஸ் மிகுந்த ஈடுபாடு உடையவர் . பெரும் நிலக்கிழார் . இவரோடு தியாகி சிவராஜ பிள்ளை செங்கோட்டை கரையாளர் ஆகியோர் படித்தனர் . இவரது பாட்டனர்ர் சுசீந்திரேசே பிள்ளை நாகர்கோயில் " நாஞ்சில் நேசன் " என்னும் பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தி வந்தார்.

இவரது உறவினரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை புத்தேரியில் வசித்து வந்ததனால் முக்கிய பிரமுகர்கள், சுகந்திரப் போராட்ட வீரர்களான, ப .ஜீவானந்தம் , சிவ. முத்துகருப்பபிள்ளை, சிறமடம் இளங்கோ, M. E .நாயுடு எனப் பல பெரியவர்கள் கவிமணியைச் சந்திக்க வந்தபோது அவர்களின் அறிமுகத்தால் சுசீந்திரேசனுக்கு பொது வாழ்விலும் சுகந்திரப் போராட்டத்திலும் ஈடுபாடு உணடானது.

படிக்கும் போதே போராட்டத்தில் கலந்து கொணடதால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். மாணவர் என்பதால் விடுவிக்கப் பட்டார்.

சுசீந்திரேசன் புத்தேரியில் இருந்து பள்ளி விடுமுறையின் போது தன் தாய்வழிப் பாட்டனர்ர் வீடடிறகு மைலாடி சேந்தன் புதூரூக்கு வருவார். அப்போது நெல்லையாண்டார் பிள்ளை, காந்திராமன் பிள்ளை , சந்தியாகு, செண்பகலிங்கம் ஆகியோர்களின் தொடர்பு ஏற்பட்டது.

1937 - ம் ஆண்டு மகாத்மா காந்தி கன்னியாகுமரிக்கு வருகை தந்தார்கள். அப்போது M E .நாயுடு, சிவன் பிள்ளை , காந்திராமன் இவர்களோடு சுசீந்திரேசனும் சென்றார் .காந்திராமன் சுசீந்திரேசனை காந்திஜியிடம் அறிமுகப்படுத்தினர். காந்திஜியை நேரில் பார்த்த சுசீந்திரேசனுக்கு அவரிடம் மிகுந்த பக்தியும் சுகந்திரப் போராட்டத்தில் தீவிர ஈடுபாடும் ஏற்பட்டது.

தந்தை காலமான பின்பு சுசீந்திரேசன் தன் தாயுடன் சேந்தன் புதூரில குடியேறினார். 1942 ல் மயிலாடியில் வாலிபர் சங்கம் தொடங்கினர்ர். 1943 ல் நாகர்கோயில் மத்திய வாலிபர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொணடு தலை மறைவானார்.

1945 ல் அட்வகேட் திரு . சங்கரம் பிள்ளையைத் தலைவராகவும் M . சுந்தரம், எஸ். சிவன்பிள்ளை ஆகியோரைக் கர்ரியதரிசியாகவும், பி.எஸ் . மணி,சிவ முத்து கருப்ப பிள்ளை, ஆர். கே. ராம், சுசீந்திரேசன் போன்றோரைக் கொண்ட நாகர்கோவில் டிவிசன் காங்கிரஸ் கமிட்டி செயல் பட்டு வந்தது.

இந்த நேரத்தில் மலையாளப் பகுதிகளில் ஒன்றான மலபாரில் மாகாண காங்கிரசினர் ஐக்கிய கேரள அமைப்பில் 'காசர் கோடு முதல் கன்னியா குமரி ' வரை கேரளம் எனத் தீர்மானம் கொண்டு வந்தனர். அதை எதிர்த்த P .S .மணி மாகாண காங்கிரசில் இருத்து விலகி, வைக்கம் வீரர் காந்தி ராமனைச் சந்தித்து 1945 ம் ஆண்டு டிசம்பர் மாதம் திரு. தமிழரியக்கம் ஆரம்பித்தார் . பின்பு திரு. தமிழரியக்கம், 'அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ்' அதன் பிறகு திருவிதாங்கூர் தமிழ்நாடு எனவும் பெயர் மாற்றம் பெற்றது. இந்த வேளையில் சுசீந்திரேசன் சமஸ்தான காங்கிரசில் அதிருப்தி கொண்டு திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசில் சேர்ந்தார்.

1946 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ம.பொ.சிவஞானம் அவர்களின் கூட்டம் சுசீந்திரேசன் தலைமையில் நடை பெற்றது. மேலும் அதே ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் முவர்ணக்கொடி பறக்கத் தடைவிதிக்கப் பட்டது. அதனை எதிர்த்து சுசீந்திரேச பிள்ளை,C .ஆறுமுகம, S . சிவன் பிள்ளை ,காந்திராமன், போன்றோர் கையில் முவர்ணக் கொடியுடன் சென்று தடையை மீறினர்.

1947 ல் திருவனந்த புரத்தில் நியூ தியேட்டரில் புதிய அரசியல் ஸ்தாபனம் அமைப்பதில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசுக்கு அழைப்பில்லாததை எதிர்த்து காந்திராமன் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்டோரோடு சென்று எதிர்ப்புத் தெரிவித்தவர் சுசீந்திரேச பிள்ளை.

1947 ல் நேசமணி அவர்கள் தி.த .நா. காங்கிரசில் சேர்ந்தார். பின்னர் 1949 ல் கொச்சி திருவிதாங்கூரோடு இணைந்த போது கேரளத்தின் தமிழ்ப் பகுதிகளைத் தமிழ் நாட்டோடு இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு போராட்டத்திட்டமிட்டது. இதனை அறிந்த மலையாள அரசு, நத்தானியேல், நேசமணி, ஆர். கே. ராம்,பி.எஸ். மணி,காந்திராமன் ஆகியோரை இரவில் கைது செய்தது. இதனைத் தொடர்ந்து போராட்டமும் போலிசாரின் அடக்கு முறையும் நடந்தது. இதில் சுசீந்திரேசன், சிதம்பரநாதன் நாடார், C .ஆறுமுகம நாடார், P .J .பொன்னையா, வேலாயுதம் போன்றோர் கைது செய்யப்பட்டனர்.

1950 -ல் தி.த .நா. காங்கிரசில் பிரச்சினைகள் ஏற்பட்டு இரண்டாகப் பிரிந்தது. தாணுலிங்கம் நாடார் ,P S மணி மற்றும் பலர் தாணுலிங்கம் நாடார் தலைமையிலும் T . S .ராமசாமி பிள்ளை , நேசமணி, ரசாக் மற்றும் பலர் நேசமணி தலைமையிலும் பிரிந்தனர். சுசீந்திரேசபிள்ளை நேசமணியோடு சேர்ந்தார். ப . ஜீவனாந்தம், ம .பொ.சி இருவரும் அனைவரையும் அழைத்து தனித் தனிப் பிரிவினராக இருத்தால் நமது இலட்சியமான தாய் தமிழகத்துடன் இணைவதில் பின்னடைவு ஏற்படும்.எனக்கூறி 1952 -ல் அனைவரும் நேசமணி தலைமையில் ஒன்று சேர்ந்தனர்.

1954 -ல் நீதி மன்றம் முன் மறியல் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டு, கன்னியாகுமரியிலிருந்து நடந்து வந்து மறியல் நடைபெற்றது. காந்திராமன்,சுசீந்திரேசன்,பகவதிப்பெருமாள் ஆகியோர் நீதி மன்ற மறியலுக்குப் புறப்பட்டபோது ஜீவனாந்தம், ம .பொ.சி, குஞ்சன் நாடார், தாணுலிங்கம் நாடார், சிவ முத்து கருப்ப பிள்ளை, P .S .மணி போன்றோர் மூன்று பேருக்கும் மாலையணிவித்து, வழியனுப்பினர்கள்.இன்று அந்த இடத்தில் காந்தி மண்டபம் உள்ளது.

மறியல் நடத்திய காந்தி ராமன்,சுசீந்திரேசன், பகவதிப் பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு நடை பெற்றது. பல போராட்டங்களில் ஈடுபட்டு, பல முறை சிறை சென்றதாலும், குமரி மக்கள் அனைவருடனும் ஜாதி, மதம் , உயர்வு தாழ்வு இன்றி பழகி வந்தவர் சுசீந்திரேசன் பிள்ளை அவர்கள்,அதன் காரணமாக பல பெரும் தலைவர்களின் அறிமுகமும் ஆதரவும் பெற்றவர் சுசீந்திரேசபிள்ளை.

இவர் வீட்டிற்கு வந்து சென்ற பெரியவர்களில் ஜெயப் பிரகாஷ் நாராயணன்,வினோபாபாவே ஜீவா ,என் .எஸ் .கிருஷ்ணன், சதாவதானி செய்குத் தம்பி பாவலர், நேசமணி, பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர், மைத்துனர் சசிவர்ணத் தேவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். கர்ம வீரர் காமராஜர் அவர்கள் ,சுசீந்திரேசன் அவர்களை அழைக்கும் போதெல்லாம் சுசீந்திரேசன் அவர்களுடைய தாத்தா வெளியிட்டு வந்த 'நாஞ்சில் நேசன் ' பத்திரிக்கை பெயராலேயே 'நாஞ்சில் நேசன் ' என்று அழைப்பார்கள் , நேசமணி அவர்கள் தம்பி நேசன் என்று அழைப்பார்கள்.

அரசு வழங்கிய ஓய்வூதியத்தை என் நாட்டிற்குச் செய்த தியாகத்திற்கு விலை வாங்க விருபவில்லை என மறுத்தார்.சிறை, போராட்டங்கள் என ஈடுபட்டதில் உடல் நலம் குன்றி 6-9-1990 அன்று காலமானார் .

 

 

நீல நாராயணன்
\"\"

திரு. நீலநாராயணன்
(பெரியார் விருது பெற்றவர்)
    இளமைக்கால முதல் தன்மான இயக்கத்தின் தளர்வடையாத் தொண்டராக தந்தை பெரியாரின் கொள்கைகளை உறுதிதயோடு நடைமுறைப்படுத்தும் சுயமரியாதைச் சுடராக  எத்துணை துன்ப துயரங்கள் அடுக்கடுக்காகப் படையெடுத்தாலும் சலனமடையாத உரமுடைய உள்ளம் பெற்றவராக-உழைப்பு உழைப்பு. ஒயாத உழைப்பின் உருவமாகத் திகழ்பவர் குமரி மாவட்டம் தந்த உடன் பிறப்பு நீலநாராயணன் அவர்கள்.
    கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளராக அவர் பொறுப்பேற்று ஏழை எளிய சாதாரண சாமானிய மக்களின் பாதுகாப்பு அரண் கழகம் என்பதை நிலைநாட்டும் வகையில் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் பொன்னேடுகளாக விளங்கிக் கொண்டிருக்கின்றன.
    அண்ணா அவர்க்ள கூறிய கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற மூன்று சொற்களின் வடிவமாகவும்-எந்த நிலையிலும் அமைதியிழக்காது பணிபுரியும் பொறுமையின் களஞ்சியமாகவும்-கழக அமைப்புக்களை இணைத்துச் செயல்படும் ஆற்றலில் ஈடு இணையற்றவராகவும் போற்றப்படும் செம்மல் நீலநாராயணன் ஆவார்.
    நாற்பதாயிரம் கிளைக் கழகங்கள் - அவைகள் இணைந்த ஒன்றிய நகர மாவட்ட அமைப்புகள் இவற்றுக்கான கட்சித் தேர்தலை முறைப்படியும் உரிய நேரத்திலும் நடத்துவதற்குத் தலைமைக் கழகத்தின் அலுவலகமும்-அலுவலர்களும் இராப்பகலாக இயங்கினாலும் கூட கழகத்தின் முப்பது லட்சம் உறுப்பினர்களின் கட்டுக்கோப்பு குலையாமல் - அத்துணை அமைப்புகளின் தேர்தலையும் நடுநிலை பிறழாது விருப்பு வெறுப்பின்றி ஒரு தலைமைக்கழக செயலாளருக்குரிய பொறுப்புடன் அணுகி முகச்சுளிப்போ முணுமுணுப்போ இன்றி எந்நேரமும் எறும்பு பொல் சுறுசுறுப்புக் காட்டும் இவரது எளிய இயல்பினாலன்றொ வெற்றிகரமாக நிறைவெற்ற முடிகிறது.
    தலைவர் கலைஞரின் அன்பு உடன் பிறப்பாக இருந்த தந்தை பெரியார் அறிஞர் அண்ணா இவர்களின் கோட்பாடுகளை நிறைவேற்றும் பணி தொடர்ந்து எமர்ஜன்சி காலத்து அடக்கு முறையில் ஓராண்டு மிசாக் கைதியாக அடைக்கப்பட்டு சிறையில் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்ட நெரத்திலும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொண்ட கழகத்தின் அமைப்புச் செயலாளர் நீலநாராயணன் அவர்களின் இலட்சியப் பிடிப்பையும் தியாகத்தையும் நெஞ்சத்துணிவையும் பாராட்டும் வகையில் சென்னை மாவட்டக் கழகம் நடத்தும் முப்பெரும் விழாவில் (1987) தலைமைக்கழகத்தின் பெரியார் விருதினை தலைவர் கலைஞர் அவர்கள் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.
 

 

 

திரு . தளவாய் வேலுதம்பி

திரு . தளவாய் வேலுதம்பி 

 

Velayudhan Chempakaraman Thampi was born in the village of Kalkulam to Sri Kunjumayitti Pillai and his wife Valliyamma Pillai Thankachi on the 6th of May 1765, at Thalakulam Valiyaveedu, near the town of Nagercoil (around 16 km from Nagercoil) in present day Indian state of Tamil Nadu which then comprised a southern district of the Travancore country.
He came from a family that had been honoured with the high title of Chempakaraman for their services to the state by Maharajah Marthanda Varma.
Velayudhan Thampi, better known as Velu Thampi, was appointed a Kariakkar or Tahsildar at Mavelikkara during the initial years of the reign of Maharajah Bala Rama Varma.

Bala Rama Varma was one of Travancore's least popular sovereigns whose reign was marked by unrest and various internal and external problems to the state.
He became King at the young age of sixteen and came under the influence of a corrupt nobleman known as Jayanthan Sankaran Nampoothiri from Calicut, in the Zamorins kingdom.
One of the first acts of atrocities during his reign was the murder of Raja Kesavadas,the existing Dewan of Travancore.Sankaran Nampoothiri was then appointed as Dewan (Prime minister) with two other ministers.
Due to corruption, soon the treasury was empty. So they decided to collect money by ordering the Tahsildars (District Officers) of the districts to pay large amounts of money which they determined without any reference to the revenue of the districts.
They were called to the palace and told to pay the amount. Velu Thampi who was the Tahasildar of a southern district was called and ordered to pay Rs.3000 to which he responded asking for three days time.
Velu Thampi returned to the district gathered the people together {most of them nanjil vellalar}  and there was an uprising.
People from all parts of the State joined together and surrounded the palace demanding an immediate dismissal of Jayanthan Sankaran Nampoothiri and banish him from the country.
They also demanded that his two ministers to be brought to a public place, flogged and cut off their ears.
The punishments were immediately carried out and the two ministers were put in jail at Trivandrum. Later Velu Thampi was appointed the Dalawa of Travancore.

After Velu Thampi became Dalawa of Travancore he faced serious opposition from two relatives of the late Raja Kesavadas who applied for help to get rid of Velu Thampi from their associates at Bombay. These letters were intercepted and presented to the Maharajah in a negative light, who ordered the immediate execution of the two men, Chempakaraman Kumaran Pillai and Erayiman Pillai. Having cleared his way, Velu Thampi became the Dalawa facing no more opposition. The Madras Government sanctioned his appointment within a few months.

Velu Thampi was not an able statesman like Ramayyan Dalawa or Raja Kesavadas his immediate two predecessors. He was of rebellious nature. Within three years of the death of Raja Kesavadas the country was plagued with corruption and various problems caused by the banished Namboodiri Dalawa.
Velu Thampi resorted to harsh punishments with a view to improve situations in his country. Flogging, cutting of the ears and nose, nailing people to trees etc. were some of the punishments adopted during his reign as Dalawa. The harshness however had its effect and peace and order was restored within the state within a year of Velu Thampi's accession to Dalawaship.

The sword that was used by Velu Thampi Dalawa to fight against British imperialism, was kept with the Kilimanoor royal family, for about 150 years. It was presented in 1957, to India's then president Rajendra Prasad by a member of the royal family.

On June 20, 2010 it was brought back to Kerala and was placed at his ancestral house at Tripthi Shastamangalam, Trivandrum.

In memory of the courage of Velu Thampi Dalawa, the Kerala State Government instituted a memorial, a research center, a museum, a park and a statue at Mannadi. Another statue of Velu Thampi Dalawa can be found in front of the "old secretariat" of Kerala in Trivandrum.
 

 

 

தியாகி கே.நாகலிங்கம்

தியாகி  கே.நாகலிங்கம்


           இந்தியா நாட்டு மாபெரும் விடுதலை இயக்க வரலாற்றில்  பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு போராட்டம் நடைபெற்றதை அறியலாம். அப்போராட்டக் காலங்களில் புதிய ரத்தமாக எண்ணற்ற இளைஞர்கள்  தியாகத் தீயில் குதிக்க முன்வந்தனர். அவ்வாறு 1942 போராட்டத்தின்போது நாகர்கோயிலிருந்து  வெளிச்சத்திற்கு வந்தவர் உயர்திரு.கே.நாகலிங்கம் அவர்கள்.
      
            நகர்கோவில் நகரின் மையப்பகுதி திழகர் தெருவில் திரு.எஸ்.கோலப்பில்லை, திருமதி.பார்வதியம்மாள் தம்பதியினரின் 2வது மைந்தனாக 11.05.1920-ல் பிறந்தர்.முதல் 8 ஆண்டுகள் திருவனந்தபுரத்திலேயே வாழ்ந்தார்.ஆரம்பத்தில் அவர் படித்தது மலையாளம். பின்னர்  11 ஆம் வகுப்புவரை நாகர்கோவில் ஸ்காட்  கிருஸ்தவ உயர்நிலைப் பள்ளியில் 1939-ல் படிப்பை முடித்தார்.பள்ளி படிப்பின்போதே தேசீய உணர்வால் உந்தப்பட்டு  வேலை  நிறுத்தங்கள், போராட்டங்களில் ஈடுபட்டார். அப்போதெல்லாம் போராட்டக்களத்தில் இறங்கிய மாணவர்களை திரு.நேசமணியின் தூண்டுதலால் தாக்கப்பட்டார்கள். 1942 வரை ஊர் காரியங்களிலும், பொதுத் தொண்டுகளிலுமாக கலம் உண்டோடியது.

             அவரிடம் இயற்கையாக அடங்கி இருந்த  தேசீய  உணர்ச்சியை  1942-ல் தூண்டடியது. இயக்கம் அழைத்தது. அவ்வழைப்பு அவரது ஒவ்வொரு நரம்பையும்  முறுக்கியது.அத்துடிதுடிப்பினால் ஒரு போலீஸ் சி.ஐ.டி. இவரிடம் கம்பால் அடிபட்ட நிலை நேர்ந்ததுண்டு.             திரு.நாகலிங்கத்தின் தேசீய  முன்னோடிகளான, டாக்டர் எம்.ஈ. நாயுடு, பொ.திரிகூடசுந்தரம் பிள்ளை, சிவ முத்துக்கருப்ப பிள்ளை, ஏ.சங்கர பிள்ளை. நாராயணப்பெருமாள்  நாடார் ஆகியோராவார்கள் தீண்டாமை,சுகாதாரம்,கதர்  ஆடை பொன்றவைகள் அன்றைய நிலையில் தேசீயவாதிகளுக்கு கற்பிக்கப்பட்டன. தேசீயவீரர்களுக்கு விடுதலை மட்டுமல்ல நோக்கம், ஆரம்ப  காலத்திலிருந்தே  திரு.கே.நாகலிங்கம் இதை உணர்ந்த்திருக்கிறார். வைசிராஸ்  சுப்பிரமணியம் என்பவர், சிருவர்களுக்கு தக்களில் (இராட்டை) நூற்கக் கற்பித்தும், தேசீயபாடல்களை  சொல்லிக் கொடுத்தும் சுதந்திரக் கனலை முட்டினார்.திரு.கே.நாகலிங்கம் அந்தக்கூட்டத்தில் ஒருவராய் சென்றார். ஆந்திரா இராமானுஜதாஸ் என்பவரின்  தொடர்பும்  அவருக்குக் கிடைத்தது.

             தெருவுக்கு தெரு நடிப்பாதை  கொவில்களையும், அரசியல் கொடிக் கம்பங்களையும் நிறுவும் காலம்  இன்றைய  காலம். இதில் அன்றைய இளைஞர்களின்  தேசீய உணர்வு ஈடுபாடு  அதிகமிருப்பதைக் காணமுடியும். வெள்ளைக்கார அரசுக்கு வெஞ்சாமரை விசிய  திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாகர்கோவிலில் 1938-ல் மேலரதவீ தியில், இந்தியாவின் மாபெரும் தேசீயத் தலைவர்  திலகர் பெருமானின் திருபெயாரால் "திலகர் வாலிபர் சங்கம" நூல்  நிலையவாசிப்புச் சாலியை  அமைத்தார். பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சங்கத்திற்குசொந்தக் கட்டிடம் கட்டினார். அதுவும் ஒரு கோவில் இடத்தில் கோவில் முன்பாக அமைந்தது. 1942 ஆரம்பத்தில் அந்த நூல் நிலையத்தில் திரு.ஜீவா பேசினார்.அவர் அப்போது பிரிட்டீஸ்  ஆட்சியிலிருந்து நாடுகடத்தப்பட்டிருந்தார். ஜீவாவையும்.சி.பி.இளங்கோவையும், ஜி.எஸ்.மணியையும் அன்று திலகர் வாலிபர் சங்கத்தில் பேச வைத்தவார் நாகலிங்கம் அவர்களே. அன்று திரு நாகலிங்கத்தின் கொள்கையில் முற்போக்கு வாடை விசுகிறதென்றால் அது ஜீவா ஏற்றிய தீபம் என்று சொல்லலாம்.              1942 ஆகஸ்ட் 9,வெள்ளையனே வெளியேறு  போராட்டத்தை மகாத்மா முன் வைத்தார்.நடேங்கும் கிளர்ச்சி, பம்பாயில் குதிரைச் சறட்டு,சென்னையில் கண்ணீர் புகை, நகர்கோவிலும் புரட்சித் தீ, அது  காட்டுத் தியாய்  வெடிக்கவில்லை. ஆனால் எரியத்தான்  செய்தது. வக்கீல்  எஸ்.சுப்பிரமணிய பிள்ளை, சிவமுத்துக்கருப்ப பிள்ளை,கோட்டாறு பத்மசிங், நாகலிங்கம் ஆகியோர் அரசுக்கு எதிராக தடையை மீறினார். காவல்துறையின் ஆதிக்கம் அன்று அத்துமீறியது. கூட்டம் போட்ட  மக்களை  விரட்டினர்.  காட்டுவாசிகளாயினர், அவர்களின் அடிக்குப் பலியான அராஜகத்தைத்  தாங்காத பொதுமக்கள் காவல்துறைக்  கண்காணிப்பில் (போலீஸ்  கேம்பில்) சென்று மறியல் செய்தனர்.

              அன்று இரவு 2 மணிக்கு போலீஸ் சூப்பிரண்டென்ட்  சுப்பிரமணிய பிள்ளை தலைமையில் போலிசார்  நாகலிங்கத்தைக் கைது செய்தனர். அவர் கோட்டாறு காவல்நிலைய  லாக்கப்பிற்கு அடைக்கப்பட்டார்.பின் குழித்துறை காவல்நிலைய  லாக்கப்பிற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையும், 500 ரூபாய் அபராதமும்  விதிக்கப்பட்டது. பின்னர் திருவனந்தபுரம் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.1942 போரட்டத்தில் முதன்முதளில் கைதான தியாகிகளில் நாகலிங்கமும் ஒருவர். அன்று அவரோடு சிறையில் உடன் இருந்தவர்கள் சிவமுத்துக் கருப்ப பிள்ளை, எஸ்.சிவன் பிள்ளை,பத்மசிங் மற்றும் கேரளத்தில் பிற்காலத்தில் அமைச்சர்களாக இருந்த சி.கேசவன், பட்டம் தாணுபிள்ளை, ஜான் பிலிப்போஸ் மேலும் பலர்.

             1943-ல் விடுதலை பெற்ற நாகலிங்கம் அரசாங்கத்தின் கழுகுக் கண்களின் பார்வையில்தான் இருந்தார்.1943 மார்ச்சில் நாகர்கோவில் பாலமோர் ரோட்டில் கிருஷ்ணா ரெடி மெய்டு ஸ்டோர்ஸ் என்ற கடையொன்றை தொடங்கி நடத்திவந்தார்.எனினும் பொதுத் தொண்டை விட்டாறில்லை.அப்போதும் அவருக்கு துன்பம்தான்.1946 சுசிந்திரம் தேரில் கொடிகட்டியதாக வழக்குத் தொடுக்கப்பட்டவர்களில் நாகலிங்கமும் ஒருவர். 2 ஆண்டுகள் அவ்வழக்கில் அவரை அலைக்கழித்த அரசு பின் வழக்கை வாபஸ் பெற்றது.              1945, திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ் தன் இன உணர்வு அடிப்படையில் மலையாளம் பேசும் மக்கள் கொண்ட மாநிலம் அமைத்தலை லட்சியமாக ஏற்றுக்கொண்டது.அந்த மலையாளம் பேசும் மாநிலத்தில் திருவிதாங்கூரினுள் சிக்கியுள்ள தமிழர்கள் மிகுதியாக வாழும் 2000 சதுர மைல்களையும் உள்ளடக்கி காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை கேரளம் என்ற கோஷத்தை எழுப்பினர். இது  நாஞ்சில் நாட்டைச் சேர்ந்தது. அன்று சமஸ்தானக் காங்கிரஸினுள் செயல்பட்டு வந்த தமிழர்களில் ஒருசில இளைஞர்களை கொதிப்படையச் செய்தது, எதிர்ப்பு தோன்றியது. அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ்  அமைந்தது. இதுவே 1946-ல் "திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்"என பெயர் மாற்றம் பெற்றது. அந்த அ.தி.த. காங்கிரஸின் ஆரம்ப கூட்டத்தை 16.12.1945-ல் கூட்டுவித்த இரு கன்வீனர்களில் திரு.நாகலிங்கமும்,இன்னொருவர் திரு.இரா.வேலாயுதப் பெருமாளும் ஆவர். இந்த நேரத்தில் நாகலிங்கம்,  பி.எஸ்.மணி,ஆர்.கே.ராம் ஆகியோர் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் நடந்த  காங்கிரஸ் மாநாடுகளுக்குச் சொந்த செலவில் சென்று வந்தனர்.அங்கு சந்தித்த தலைவர்களிடம்  திருவிதாங்கூர்  தமிழ்ப்பகுதிகளை தமிழ்நாடு காங்கிரஸின் கீழ்கொண்டுவர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

             1946-ல் அவருக்கு திருமணம் நடைபெற்றது.கன்னியாகுமரியைச் சேர்ந்த பகவதியம்மாள் அவருக்கு திருமதி ஆனார். அத்திருமணம் கூட அவரது விருப்பத்திற்கு ஏற்ப சீர்திருத்த மணமாக மாபெரும் தியாகி சிவ.முத்துக்கருப்ப பிள்ளை அவர்கள் தலைமையில் மாலை மாற்றலோடு நடைபெற்றது.கதர் அவரது நிரந்தர ஆடை. வெள்ளை நிற கதர் வேஷ்டி, வெள்ளை கதர் ஜிப்பவைத்தான் அணிந்து வந்தார். தன்னுடைய கொள்கைப் பிடிப்பால் அத்தனை உறுதியுடன் செயல்படும்  அக்மார்க் இறையாண்மைக் காவல் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது.

             அ.தி.த. காங்கிரஸில் சில காலம்  கூட்டு செயலாளர்களில் ஒருவராகவும், பின் பொதுக்குழு  உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். திருதமிழரியக்கத்தின் நியாயங்களை எடுத்துக்கூறி  தமிழ்நாடு மக்களின் ஆதரவு தேட தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்ட உழைக்கும் உருப்பினர்களில் ஒருவராக பணியேற்று சிறப்பும் செய்துள்ளர்.

              1948-ல் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.இதைத் தேர்தல் என்பதைவிட மலையாள அரசுக்கும் திருவிதாங்கூர் தமிழர்களுக்குமிடையே நடைபெற்ற போராட்டம் என்றே  கூறலாம். திரு -  தமிழ் பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்பதனை தேர்தல் மூலம் நிச்சயப்படுத்தும் போர் என்றே தெரிவிக்கலாம். அப்போரின் போது எண்ணற்ற தமிழ் இளைஞர்கள் வீரர்களாக தேர்தல் களத்தில் தீவிரமாகினர். அதில் ஒரு துணிச்சல் மிக்க வீரராக செயல்பட்டவர்  நாகலிங்கம் அவர்கள்.

              1948-ல் திருவிதாங்கூரில் தேர்தல் நடந்தது.அப்போது உண்ணித்தான் என்பவர் திவானாக இருந்தார்.  திருவிதாங்கூர்  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக ஆர்.கே.ராம், ஸ்ரீ.ப.தாஸ், பி.ஜே.பொன்னையா ஆகியொர் தேர்தலின் நின்றனர்.அப்போதெல்லாம் நாகர்கோவில் நகர்மன்றத் திடலில் அரசியல் கூட்டங்கள் நடப்பது வழக்கம்.திலகர் வாலிபர் சங்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் தி.த.நா.காவுக்கு எதிராக நிகழும் அரசியல்  கூட்டங்களில் கலவரம் செய்தனர்.இதனால் சமஸ்தான  காங்கிரசுக் பகை உணர்ச்சி மேலோங்கியது. போலீசைத் தூண்டினர். போலீஸ்  நாகலிங்கத்தின் சகோதரர்  நாகரு பிள்ளையைத் தேடியது. அவரைப் பிடிக்க முடியவில்லை. இதனால் கோபம்கொண்ட போலீஸ் மக்கள்  நடமாட்டம் அதிகமுள்ள பாலமோர் சாலையில் தன் கடையில் அமர்ந்திருந்த   நாகலிங்கத்திடம்  நாகரு பிள்ளை எங்கே என்று கேட்டனர். அவர் எனக்குத் தெரியாது என்றார்.அவ்வளவுதான் ஒரு போலீஸ்  வேனிலிருந்து ரிசர்வ் போலீஸார் நாகலிங்கத்தை கடையிலிருந்து பலவந்தமாக இழுத்து சாலையில் போட்டு பட்டப்பகலில் பலர் பார்க்க அடித்தனர், உதைத்தனர். போலீஸ் வேனின் உள்ளே தூக்கிப்போட முயன்றனர். இச்சமயத்தில் அடுத்து நின்ற கூட்டமும்,பக்கத்துக் கடை  பிரமுகர்களும் இவ்வநியாயத்தை எதிர்த்தும், தடை செய்தும்   கூச்சல் போட்டனர். கலகம்  வரும் என்ற நிலை எட்டியதும் போலீஸார் அவசர அவசரமாக வேனில் ஏற்றிச் சென்றுவிட்டனர்.வழக்கு ஒன்று பதிவு செய்து   திரு.நாகலிங்கத்தையும்,அவரோடு ஒன்பது பேர்களையும் எப்படியும் பிடித்துவிடுவது என மலையாள  போலீஸார் வேட்டை நாய்களாயினர். அகப்பட்டது தளபதி காந்திராமனும், தொண்டர்  அப்துல்  காதரும். இவர்கள் சித்தரவதைக்குட்பட்டனர். அடிப்பட்ட நாகலிங்கம் தி.த.நா.காங்கிரஸ் ஆபீஸில் இருந்த நேசமணியிடமும், நத்தானியலிடமும் சென்றார். தான்பட்ட அவலத்தைச் சொன்னார். மறுநாள்  திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டது. அன்று நகர்மன்றத் திடலில்  கூட்டமும் நடைபெற்றது. பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.நாகலிங்கத்தை போலீஸார் தேடினர். நாகலிங்கம் தமிழ்நாட்டிற்குத் தலைமறையாயினர். அங்கு நாகலிங்கம் தமிழ்த் தலைவர்களைக் கண்டு திருவிதாங்கூர் போலீஸின் அடக்குமுறைப் பற்றிச் சொன்னார். ஆதரவு தேடினார்.               தேர்தல் முடிவுகள் வந்தன.நாகலிங்கத்தை தாக்கிய போலீஸின் ஆராஜகம் தலைகுனிந்தது. திரு.நாகலிங்கம் அன்றுபட்ட அடி,உதை, அம்மாதிரியே திரு.காந்திராமன், திரு.அப்துல்காதர் போன்றவர்கள் பட்ட இடிகள்தாம்  தமிழ் வெட்பாளர்களின் ஓட்டு பெட்டிகள் நிறைந்து வடியவும், எதிரிகள் டிப்பாஸிட் இழக்கவும் செய்தன என்றல் மிகையாகாது. நாகலிங்கம் மிண்டும் நாகர்கோவிலுக்கு திரும்பி வந்தார். கோர்ட்டில் ஆஜராகி வழக்கு நடத்தி வெற்றி பெற்றார்.

               1953,1959 ஆகிய ஆண்டுகளில்  நாகர்கோவில் நகர்மன்றத் தேர்தலில் 11-ம் வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற நாகலிங்கம் செய்த பணிகள் இவை -

1)         இன்று  நாகராஜா திடலாக இருந்த இடம் முன்பு கொசு அரிக்கும் குளமாக இருந்தது.அதை மாற்ற பெரும் முயற்சி செய்து வெற்றி கண்டது.

2)         11-ம்  வார்டில் வீதிகளில், முடுக்குகளில் சிமெண்ட்  மற்றும் தார் சாலைகளை இட நகர்மன்றத்தில்   வெண்டி  வெற்றிக்கண்டது.

3)         பெண்களுக்குரிய  கழிப்பிடங்கள் 11-ல் வார்டில் கட்டிக் கொடுத்தது.

4)         இன்றைய விளையாட்டரங்கை உருவாக்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற உதவியது.

5)         நாகர்கோவில் நகர்மன்றத்தில் நாகராஜா திடலை 99 வருடங்கள் தனி நபருக்கு குத்தகை விட தீர்மானம் வந்தபோது அதனை உறுப்பினர் திரு.கே.நாகலிங்கம் அவர்கள் சுயநலம் கருதாமல் பொதுநலனுக்காக மேற்படி தீர்மானத்தை எதிர்த்து பேசி தீர்மானத்தை நிரைவெற்ற முடியாமல் செய்து இன்று சுமார்  ரூ.40 கோடி  மதிப்புள்ள நாகராஜ திடலை தனி நபரின் கைக்கு மாறாமல் அரசாங்க சொத்ததாக இருக்கும்படி செய்த பெருமை நாகலிங்கம் அவர்களுக்கே சேரும்.

            இந்தப் பொதுத் தொண்டுகளைச் செய்து வரும்போது 1954-ல் மிண்டும் நாகலிங்கத்தை திருவிதாங்கூர் போலீஸ் தக்கலை சதிவழக்குக்காகத் தேடியது. போலீஸாரின் கைகளில் சிக்காது  தமிழ்நாடுக்கு  தலைமறைவாக இருந்து போராட்டத்தை ஊக்குவித்தார். பல மாதங்கள் நெல்லை மாவட்டத்தில் அலையும் நிலையினுள் அகப்பட்டுக் கஷ்ட நஷ்டங்கள் அனுபவித்தார். அவரது வியாபார நிறுவனம் படுத்துவிட்டது. பொருள்,பணம், நஷ்டம் அவரைப் பல இன்னல்களுக்குள்ளாகியது.

           கன்னியாகுமரி மாவட்டத்தில் 1973-ம் ஆண்டு அரிசி தட்டுப்பாடு அதிகமாகியது. நெல்லை மாவட்

 

 

முதுபெரும்புலவர். தமிழ்மேதை த. சாஸ்தாங்குட்டிப்பிள்ளை

முதுபெரும்புலவர். தமிழ்மேதை த. சாஸ்தாங்குட்டிப்பிள்ளை

    சாஸ்தாங்குட்டிப்பிள்ளை அவர்கள். தமிழ்ப்பெரும் இமயம் சதாவதானி என்று பாரதப்புகழ் பெற்ற பெருமகன் ஷெக்குத்தம்பி பாவலர் அவர்களிடம் 25-வருடங்கள் தமிழ்ப் படித்தார். தினமும் தெங்கம்புதூரிலிருந்து ஐந்து மைல் தொலைவில் உள்ள இடலாக்குடி ஊருக்கு கால் நடையாகவே நடந்துச் சென்று படித்தவர்கள்! ஓன்றல்ல இரண்டல்ல 25 வருடங்கள்! அவர்களுக்கு திருமணம் முடிந்து இல்லத்தரசி அவர்கள் மூன்று மாதங்களெ வாழ்ந்தார்கள்.  அவர்கள் மறைந்தப் பின் திருமணமே வேண்டாம் என்று பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார். உடன் பிறந்த தம்பியின் வீட்டிலிருந்து வேளா வேளைக்கு உணவு வரும். பாடம் நடத்துகிற அறையிலிருந்து எதிரில் சுமார் நூறு அடி தூரத்தில் தம்பியின் வீடு. தம்பியின் குடும்பத்தார் மிகவும் அன்பாக பரிவுடன் இருந்தார்கள். பிள்ளை அவர்களை நன்கு கவனித்துக் கொண்டார்கள்
    குமரி மாவட்டத்தில் இன்றுள்ள தமிழ்ப் பட்டதாரிகளில் மற்றும் அறிஞர்களில் பலர் சாஸ்தாங்குட்டிப்பிள்ளை அவர்களின் மாணவர்களே.
    நாகர்கோவிலிலிருந்து சுமார் ஐந்தாவது மைலில் இருக்கும் சிற்றூர் தெங்கம்புதூர். அங்கு ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்து கொண்டு தமிழ் பேரொளிப் பரப்பினார்.
சாஸ்தாங்குட்டிப் பிள்ளை அவர்கள் ஒரு நல்ல குருவாக வாழ்தார். வாழ்க அவர் புகழ்!

 

 

 

கட்டிடக்கலை மேதை திரு. பி. ரத்தினசாமி

கட்டிடக்கலை மேதை திரு. பி. ரத்தினசாமி
    இன்று குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நகரில் கம்பீரமாகத் நிமிர்ந்து நிற்கக்கூடிய அரசு கட்டிடங்களில் பழமையாகவும் ஆனால் முதன்மையாகவும் நின்று நகருக்கு அழகு செய்பவை ஒன்று சேது லட்சுமிபாய் மேல்நிலைப்பள்ளி அடுத்தது மாவட்ட நீதிமன்றம். 
    வருடங்கள் பல ஓடிவிட்டன. ஆனாலும் என்றும் சிரஞ்சீவியாய் நின்று நிலைக்கக்கூடிய உறுதிவாய்ந்தவை நாங்கள்!. என்று பறைசாற்றுகின்றன மேற்படி கட்டிடங்கள்! இவைகளைக் கட்டி முடித்த பெருமைக்குரியவர் யார்? பெருமைக்குரிய பாரம்பரிய மிக்க குடும்பத்தில் தோன்றிய பெருமாள்பிள்ளை அவர்களாவார். அப்பெருமகனாரின் நன்மக்கள் மூவரில் ஒருவரே ரத்தினசாமி
நாகர்கோவில் அருகே பீமநகரி என்ற ஒரு சிறிய கிராமத்தில் எஸ்.பெருமாள்பிள்ளை ஆனந்தம் தம்பதியாரின் மகனாக 1920 ஆம் ஆண்டு மே மாதம் தோன்றியவர் பி.ஆர்.எஸ் என்ற ரெத்தினசாமி அவர்க்ள. இவரோடு ஐந்து பெண் மக்களும் இரண்டு ஆண் மக்களும் உள்ளதில். ஆண் பிள்ளைகளில் இரண்டாவது மகனாகும் பி.ஆர்.எஸ். என்ற இரத்தின சுவாமியின் மூத்தவர் பி.எஸ். மணி. நாகர்கோவிலில் ஒரு சமூக சேவகரும் சுதந்திர போராட்ட வீரரும் தியாகியும் ஆவார். பி.ஆர்.எஸ் அவர்கள்.
தொடக்க கல்வி நாகர்கோவிலில் முடித்த பின் அந்த காலத்தில் ப்பிரி யுனிவர்சிட்டி படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்தார். அந்த காலத்தில் தொடக்க கல்வியை முடிப்பதே ஒரு பெரிய விஷயமாக இருந்தது. ரத்தினசாமி கல்வி பயில்வதில் மிகவும் ஆர்முள்ளவராக விளங்கியதை அவரது தந்தை உணர்ந்து. மகன் ரத்தினசுவாமியை மேல் படிப்பிற்காக திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு பொறியற் படிப்பு படித்தார். தன் மகன் ஒரு சிவில் பொறியாளர் ஆக வேண்டும் என்று பெருமாள்பிள்ளை நினைத்தார் அந்த காலக்கட்டத்தில் அவர் சிறிய ஒப்பந்த அடிப்படையில் கட்டிட வேலைகள் திருவனந்தபுரத்தில் செய்து வந்தார். திட்டமிட்டு அவர் தன் மகனின் படிப்பும் தன்னுடைய கட்டிட வேலைகளும் ஒன்று போல் செயல்படுவதற்காக அவர் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு குடிபெயர்ந்தார். 1940-ல் திருவனந்தபுரம் தம்பானுரில் அரிஸ்டோ சந்திப்பு அருகில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். திருவனந்தபுரத்தில் குடிபெயர்ந்து அங்கு வசிக்கத் தொடங்கி மகனின் மேல்கல்வி முடிந்து அத்துடன் சிறிய கட்டிட வேலைகளும் பொறுப்பெடுத்து நடத்தினார். அந்த சமயத்தில் சித்திரைத்திருநாள் மன்னர் அரண்மனையில் இருந்து நேரடியாக பேட்டையில் சேதுலஷ்மிபாய் பள்ளி கட்டுவதற்கு அனுமதி கிடைத்தது. மாமன்னர் அவர்களின் திருக்கரத்தால் முதன் முதலில் கிடைக்கப் பெற்ற கட்டிட ஆணை அது. இன்றைய பி.ஆர்.எஸ். இன் மாபெரும் வளர்ச்சிக்கு அதுவே அடித்தளமாக அமைந்தது. அன்றைய கால கட்டத்தில் அரண்மனையில் இருந்து கிடைத்த அனுமதியென்றால் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. அரண்மனை அங்கீகாரம் உள்ள பலவித கலைஞர்கள் வைத்தியர்கள் உண்டு அப்படி அங்கீகரிப்பட்டவர்களில் பெருமாள்பிள்ளை அவர்களும் ஒருவர் ஆனார். ரத்தினசாமி அவர்கள் கல்வி முடித்து அரசு வேலைக்கு செல்ல விரும்பவில்லை. அன்றைய கால கட்டத்தில் ஒரு அரசு வேலை கிடைப்பது மிகவும் எளிதான ஒன்று. என்றாலும் ஒரு அரசு ஊழியராகச் செயல்பட மகன் பி.ஆர்.எஸ். விரும்பவில்லை. தந்தையுடன் கட்டிட வேலைகளைச் செய்வதற்கும் அதில் சாதனை படைப்பதற்கும் அவர் விரும்பினார். தந்தையும் மகனுமாக சேர்ந்து கட்டிடங்கள் கட்டும் தொழில் தொடங்கினார்கள். அவ்வாறு இருவரும் சேர்ந்து பத்து வருட காலமாக தொழில் நடத்தி வந்த நேரத்தில் மகனின் திறமையை அறிந்த தந்தை மகனை தனியாக தொழில் செய்வதற்கு வலியுறுத்தினார். அவ்வாறு தனியாகக் கட்டுமான பணிகளை ரத்தினசாமி அவர்கள் தொடங்கினார். சிவில் பொறியியல் கல்வி கற்றது மட்டுமல்லாமல் தொழிலைப் பொறுத்து முழு அனுபவம் தந்தையிடமிருந்து கற்க முடிந்தது. எனவே வேலையைப் பற்றி முழுவதுமாக கற்றுத் தெரிந்த பின்புதான் அந்த வேலையைப் தொடங்குவார். 1961-ல் கேரளாவில் பட்டம் தாணுபிள்ளை முதல் அமைச்சராக இருந்த காலத்தில் தலைமை செயலகத்தின் தென்புறத்தில் ஒரு மாளிகையை கட்டினார். ஆகஸ்ட் 18-ம் நாள் முதல் மந்திரி அதை திறந்து வைத்தார். அந்த அரண்மனையைக் கண்ணுற்ற மன்னர் சித்திரைத் திருநாள் ரத்தினசாமி அவர்களின் திறமையை கட்டிட நேர்த்தியை மிகவும் ரசித்துப் பாராட்டினார். அத்துடன் பி.ஆர்.எஸ் என்ற மூன்று எழுத்தின் மேல் பிரமுகர்களுக்கும் பொது மக்களுக்கும் நம்பிக்கை வந்தது. எந்த வேலையாக இருந்தாலும் அதை பி.ஆர்.எஸ்.யிடம் ஒப்படைத்தால் நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கை அரசிற்கும் உண்டானது. அதன்பின் பல்வேறு வேலைகள் அவரிடம் குவிந்தன. கோவில்கள் கட்டிடங்கள் காலனிகள் மற்றும் பத்மநகர் கார்த்திகை திருநாள் தியேட்டர். கல்லூரி கேம்ப்ஸ் காரிய வட்டம் சென்னையிலுள்ள திருவிதாங்கூர் அரண்மனை புதுப்பித்தல் மற்றும் சிறிதும் பெறிதுமாய் பல கட்டிடங்கள் கட்டியுள்ளார்.
    நோயால் அவதிப்பட்டவர்களுக்காக ரத்தினசாமி அவர்கள் 1966-இல் திருவனந்தபுரம் கிள்ளிபாலத்தில் ஒரு ஏக்கர் இடம் வாங்கி மகளிருக்கும் குழந்தைகளுக்குமாக எழுபதைந்து (75)படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவமனை நிறுவினார். அன்றைய ஆளுநர் பி.இராமசந்திரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. நாளடைவில் பி.ஆர்.எஸ்.மருத்துவமனையின் வளர்ச்சி பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. இன்று அந்த மருத்துவமனை இருநூற்றி ஐம்பது படுக்கைகள் கொண்ட பலதரப்பட்ட நவீன வசதிகள் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையாக வளர்ந்து நற்பெயருடனும் புகழுடனும் செயல்பட்டு வருகிறது.
    ரத்தினசாமி அவர்களுக்கு 1945-இல் திருமணம் நடந்தது. மனைவி கிருஷ்ணம்மாள் சோந்த ஊர் ஆலப்புழை. தற்பொழுது நல்ல உடல் ஆரொக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார். மூத்த மகள் அனந்தம் ஒரு மருத்துவர். இளைய மகள் இராஜேஸ்வரி மகன் முருகன்.
    1988-இல் கேரளா பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து செனட் மெம்பராக தேர்வு செய்யப்பட்டார்.
    அரிமா சங்கத்தில் அங்கமாக இருந்து அதன்பின் உதவி மாவட்ட கவர்னர் பதவி வரை வகித்த காலத்தில் நூறு ஏழை தம்பதிகளைத் தேர்வு செய்து. தனது சொந்த செலவில் திருமணம் நடத்தினார்.
    தன்னுடைய வாழ்க்கை தனக்கு மட்டும் தான் என்ற எண்ணம் பி.ஆர்.எஸ் இன் வாழ்க்கையில் ஒரு போதும் தொன்றியதில்லை. அவர் தன் வாழ்க்கையில் ஒரு பகுதியை அனாதைகள் ஏழைகள் போன்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஆவல் எல்லா நிலையிலும் காணப்பட்டது. பணம் கொடுப்பது மட்டுமல்லாமல். அன்பும் ஆதரவும் எப்போதும் அவரிடம் இருந்து வந்தது. தமிழ் மற்றும் மலையாளம் கலந்த எல்லா இனமக்களொடும் அன்புணர்வொடும் இன்முகத்தொடும் பழகினார்.
    திருவனந்தபுரத்தில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுக்காக ஒரு தமிழ்ச்சங்கம் செயல்பட்டு வந்தது. இந்த சங்கத்திற்காக ரத்தினசுவாமி அவர்கள் கிள்ளிப்பாலத்தில் 12 சென்ட் இடம் அன்பளிப்பாக வழங்கினார். இன்று அந்த இடத்தின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும். அங்கு நிறுவப்பட்ட கட்டிடத்திற்கு இரத்தினசுவாமி ஆடிட்டோரியம் என்ற பெயர் சங்க உறுப்பினர்களால் சூட்டப்பட்டது.
    மனித நேயம் மிக்க பி.ஆர்.எஸ். அவர்கள் நோய்வாய்ப்பட்டார் செய்தி அறிந்து அவருடைய நண்பர்கள் நீங்கள் அமெரிக்காவுக்குச் சென்று சிகிட்சை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் அதற்கு? நம்ம ஆஸ்பத்திரியிலிருப்பவர்களும் திறமையான மருத்துவர்கள் தான். ஆயுள் பலமிருந்தால் போதும் என்றார்.
    ரத்தினசாமி என்ற (பி.ஆர்.எஸ்) அந்த பெரிய மனிதர் 1990 மே-12ம் தேதி இவ்வுலகத்தை விட்டு மறைந்தார். அப்பொன்மகன் உடல்கண்டு பொதுமக்கள் கண் கலங்கினார்கள். மிக பெரிய மக்கள் வெள்ளம் கண்ணீர் கடலில் மிதந்தவாறு அவரின் அவரின் கடைசி யாத்திரையில் பங்கு கொண்டது. பி.ஆர்.எஸ் மருத்துவ மனையின் முன்பு திருவனந்தபுரம் சாலையில் இரண்டு மைல் தூரத்துக்கு மக்கள் வெள்ளம் சோகக் கண்ணீர் வடித்தவாறு திரண்டு நின்றது. போக்குவரத்து மாற்று வழியில் திரும்பிவிடப்பட்டது. கேரளா முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அஞ்சலி செலுத்தினர். அரண்மனையில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டுப்போர்வை அவரின் பூத உடலில் பொருத்தப்பட்டது. இந்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
    சிட்டி கார்ப்பரேஷன் சாஸ்தாங்கோவில் மியுசிக் அகாடமி என்ற பெயரிலிருந்த சாலைக்கு பி.ஆர்.எஸ் சாலை என்று பெயர் சூட்டப்பட்டது.

 

 

தியாகி திரு பி.எஸ்.மணி

தியாகி திரு பி.எஸ்.மணி

    மாணிக்கமாக இருந்தாலும் எல்லா மாணிக்கங்களும் மகுடம் ஏறுவதில்லை. முத்துக்களேயானாலும் எல்லா முத்துக்களும் மாலையாகி மதிப்புப் பெறுவதில்லை. அம் மாதிரிப்பட்ட உயர்ந்த நிலையை இடத்தைப் பெறுவதற்கு ஒரு அதிர்ஷ்டம் வேண்டுமோ என்று எண்ணுவதற்கு சில மாணிக்கங்களையும் முத்துக்களையும் காணும்போது தோன்றுகிறது.
    இப்புனித மண்ணில் எண்ணற்ற தியாகிகள் தோன்றியுள்ளார்கள். அவர்களில் வானளாவப் புகழ் பெற்றவர்களும் உண்டு வணங்கத்தக்க நினைவாலயங்களைப் பெற்றவர்களும் உண்டு. ஒசைபரவாமலே உரிய இடத்தைப் பெறாமலே மறைந்த மாமனிதர்களும் உண்டு.
    தியாகி பி.எஸ்.மணி இம்மண்ணில் தோன்றி சுதந்திர போராட்டக்களத்திலும் மொழி இனப் போராட்ட வேள்வியிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தக்கப்படி போற்றப்படாத ஒரு போராட்ட வீரர்.
    அவருடன் நெருங்கிப் பழகியவர்களால் அண்ணாச்சி என்று அன்புடன் அழைக்கப்பட்ட தொண்ணூற்றைந்து வயது வரைக்கும் கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்தச் செம்மல்.
    இவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பன்முறை சிறை சென்றவர். வாழ்க்கையில் தியாகம் செய்தவர்கள் உண்டு. ஆனால் தியாகத்தையே வாழ்க்கையாக மாற்றியவர் மணி அண்ணாச்சி என்றால் அது மிகையல்ல.
    தவறு எங்கு கண்டாலும் எவர் செய்தாலும் உடனேயே கண்டித்து பேசுவதிலும் தனது பத்திரிகையுமான கன்னியாகுமாரி எழுதுவதிலும் மிகவும் துணிச்சல் மிக்கவர். தமிழரசுக் கழகத்தலைவர் சிலம்பு செல்வர். ம.பொ.சி. அவர்களின் மிக நெருங்கிய நண்பர். அவர்களால் தெற்கெல்லைத் தளபதி என்று பாராட்டப் பெற்றவர். மணி அண்ணாச்சி அவர்களே!
    எவரிடமும் எந்த சலுகையையும் எதிர்பார்க்காமல் தாங்கள் தலைநிமிர்ந்து நடந்தாற்ப்போன்று தங்கள் பத்திரிகையும் தலைநிமிர்ந்தே நடந்தது. இந்த உண்மை குமரிமாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் கண்ட வெளிச்சம். நாடு சுதந்திரம் பெற்றதும் இதுவே போதும் என்று சும்மா இருந்து விடவில்லை . அன்றைய திருவிதாங்கூர் மாநிலத்தோடு (இன்றைய கேரளா) இணைந்திருந்த தமிழ்ப் பகுதிகளைத் தாய்த் தமிழகத்தோடு சேர்ப்பதற்காக திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற திருப்பெயருக்கு வித்திட்டவர்.
    அவருடன் இணைந்து போராடிய தியாகிகள் தாணுலிங்கநாடார் ஸ்ரீ.வி.தாஸ் காந்திராமன் பிள்ளை சு.மு.ராம்சாம்நத்தானியேல் போன்றவர்கள்  தன்னை தன் குடும்பத்தை தன்னுடையதும் தன் துணைவியாருடையதும் சொத்துக்களையும் இழந்து மக்களால் சூட்டப்பட தியாகி என்ற கிரீடத்தை மட்டும் பெற்றுக் கொண்டார்!
    சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பன்முறை சிறை வாசம் அனுபவித்ததோடு காங்கிரஸ் பேரியக்கம் நடத்திய அரசின் சேவாசங்கம் நூல் நூற்புக் கழகம் அன்னியத்துணி புறக்கணிப்பு போன்ற அத்தனை போராட்டங்களிலும் கலந்து பல்வேறு துன்பங்களையும் மனமார ஏற்றுக் கொண்டவர்.
    தனது நண்பர்களுடன் 1943-ல் நாஞ்சில் நாட்டு வாலிபர் மத்திய சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் நிறுவினார்.
    பாரத சுதந்திரத்திற்குப் பிறகு 1945ல் இருந்தே திருவிதாங்கூரில் உள்ள தமிழ்ப் பகுதிகள் மலையாள ஆதிக்கத்திலிருந்து தாய்த் தமிழகத்தோடு இணைக்கக் கோரி கடுமையான போராட்டங்கள் நடந்தன.
    அந்த வேளையில் மணி அவர்கள் தமிழர்களுக்கென நாஞ்சில் தமிழர் காங்கிரஸ் என்ற பெயரில் ஒரு இயக்கத்தை அமைக்க துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டார். அதன்பிறகு நண்பர்களுடன் வழக்கறிஞர் திரு. பி.சிதம்பரம் பிள்ளையை சந்தித்து ஆலோசனைக் கேட்டார். அவர்கள் ஆலோசனைப்படி நாஞ்சில் தமிழர் காங்கிரஸ் என்ற பெயர் மாற்றப்பட்டு அகில திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ் என்றாகியது. பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் ஆகியது.
    இதன் முதல் தலைவர். திருவாளர். வழக்கறிஞர் சாம் நத்தானியல் அவர்கள். 1946 ஜூன் 30-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் திரு. தமிழ்நாடு காங்கிரஸ் புத்துயிர் பெற்றது! தொடர்ந்து தாய்த் தமிழக இணைப்பு போராட்டம் வேகம் கொண்டு எழுச்சி பெற்றது.
    தியாகி காந்திராமன் பிள்ளை தலைமையில் நீதிமன்ற மறியல் போராட்டம் கூட்டம் நடந்தது. எல்லா போராட்டங்களிலும் தியாகி மணி அவர்கள் பங்கு பெற்று பல துயரங்களையும் சிறைவாசத்தையும் ஏற்றுக் கொண்டார். போராட்டங்களும் தியாகங்களும் உயிர் இழப்புக்களும் வீண் போகவில்லை.
    1956-ல்  தாய்த் தமிழகத்தோடு இணைந்தது. இணைப்பு விழா சிறப்பாக நடந்தது.
    8-1-1958-ல் குமரிமாவட்ட எழுத்தாளர்களை ஒருங்கிணைந்த எழுத்தாளர்களுக்கென ஒரு சங்கம் அமைக்க வெண்டும் என்று திட்டமிட்டார் மணி அவர்கள். தியாகி பி. தாணுலிங்க நாடார் அவர்கள் தலைமையில் முதற்க் கூட்டம் நடைபெற்றது.. தியாகி மணி தேவி இதழ் அசிரியர் ட.மகாலிங்க முதலியார் ஆ.நாகப்பன் தியாகி கும்பலிங்கம் பிள்ளை முனைவர் தே.வேலப்பனார் புதலிங்கம் சுந்தர ராமசாமி ஆகிய ஓன்பது எழுத்தாளர்களுடன் முதற்கூட்டம் ராஜா ஸ்டுடியோ கலை அரங்கில் நடைபெற்றது. அதன் வளர்ச்சிக்கு மணி அண்ணாச்சி உட்பட ஒன்பது பேர்களும் உழைத்தார்கள்.
    இவ்வாறு அரசியலில் மட்டுமின்றி இலக்கியத்திற்காகவும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மணி அண்ணாச்சி அவர்கள் தனது 95-ம் வயதில் காலமானார்.
    இன்று எழுத்தாளர்கள் உள்ளத்திலும் நன்றியுள்ள அரசியல் தலைவர்கள் அகத்திலும் மக்கள் நெஞ்சிலும் நிரந்தரமாக வாழ்கிறார்.

 

திரு .நாஞ்சில் நாடன் [ G. Subramaniam ]
Nanjil Nadan was born in Veera Narayanamangalam in Kanyakumari District to Ganapathiya Pillai and Saraswathi Ammal. Born as G. Subramaniam, he uses the pseudonym Nanjil Nadan (means a native of the Nanjil Nadu .
. He has a M.Sc degree in Mathematics. He currently works at W. H. Brady and Co in Coimbatore. He began his literary career by working in Bombay Tamil Sangam's literary magazine Aedu.
His first short story Viradham was published in July 1975 in the magazine Deepam run by Na. Parthasarathy. In 2002, his novelThalaikeezh Vigithangal was made into a Tamil film titled Solla Marandha Kadhai by Thangar Bachan.
In 2010 he was awarded the Sahitya Akademi Award for Tamil for his short story collection Soodiya poo soodarka. Currently his novel Ettu Thikkum Madha Yaanai is being made into a Tamil film titled Padithurai. He has authored a total of six novels, 112 short stories,2 short story anthologies, 5 essay collections and 2 poetry collections.
Some of his works have been translated to English, Malayalam and French. Also some of them are part of the curriculum in several educational institutions.


பெயர்                                  :               G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்
எழுதும் துறை              :               நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை
பிறந்த நாள்                   :               31 டிசம்பர் 1947
பிறந்த இடம்                 :               வீரநாராயணமங்கலம்
                                                                தாழக்குடி அஞ்சல், தோவாளை வட்டம்,
                                                                கன்னியாகுமரி மாவட்டம்.
                                                                தமிழ் நாடு – 629 901.
வெளியீடுகள்
நாவல்கள்
1. தலைகீழ் விகிதங்கள்                                 – 1977, 1983, 1996, 2001, 2008
2. என்பிலதனை வெயில் காயும்           – 1979, 1995, 2007
3. மாமிசப்படைப்பு                                             – 1981, 1999, 2006
4. மிதவை                                                                – 1986, 2002, 2008
5. சதுரங்கக் குதிரை                                          - 1993, 1995, 1996, 2006
6. எட்டுத்திக்கும் மதயானை                       – 1998, 1999, 2008.
சிறுகதைத் தொகுப்புகள்
1. தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்         - 1981
2. வாக்குப் பொறுக்கிகள்                                – 1985
3. உப்பு                                                                        – 1990
4. பேய்க் கொட்டு                                                - 1994, 1996
5. பிராந்து                                                                 – 2002
6. நாஞ்சில் நாடன் கதைகள்                       – 2004
      (முழுத் தொகுப்பு)
      7. சூடிய பூ சூடற்க                                       - 2007
8. முத்துக்கள் பத்து                                           - 2007
9. கான் சாகிப்                                                          - 2010
 கவிதை தொகுப்புகள்
1. மண்ணுள்ளிப் பாம்பு                                   - 2001
2. பச்சை நாயகி                                                  - 2010
கட்டுரை தொகுப்புகள்
1. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை                             - 2003, 2004, 2008
2. நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று                                    - 2003, 2008
3. நதியின் பிழையன்று  நறும்புனல் இன்மை                      - 2006
4. காவலன் காவான் எனின்                                                           – 2008
5. தீதும் நன்றும்                                                                                      - 2009
 6. திகம்பரம்                                                                                                – 2010
 
 வாங்கிய பரிசுகள்
1.    தமிழ்நாடு அரசு பரிசு                                                            :       1993 ஆம் ஆண்டின் சிறந்த நாவல்,
        தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை                                       முதல் பரிசு : சதுரங்கக்குதிரை
2.    கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை                          :       1993 & 1994 ஆம் ஆண்டுகளுக்கான
        கோவை                                                                                               சிறந்த தமிழ் நாவல் :
                                                                                                                           சதுரங்கக்குதிரை
3.    புதிய பார்வை – நீலமலைத்                                           :       1993 ன் சிறந்த  நாவல் :
        தமிழ்ச்சங்கம் பரிசு, சென்னை                                               சதுரங்கக்குதிரை
4.    லில்லி தேவசிகாமணி                                                        :     1994 ன் சிறந்த சிறுகதைத் தொகுப்பு     
        இலக்கியப்பரிசு, கோவை                                                            பேய்க்கொட்டு
5.    தெய்வத் தமிழ்மன்றம் பரிசு                                          :       1986 ன் சிறந்த நாவல் :
        மயிலாடுதுறை                                                                                  மிதவை
6.    பம்பாய்                                                                                           :       1986 ன் சிறந்த நாவல்:
        தமிழ் எழுத்தாளர் சங்கம் பரிசு                                              மிதவை
7.    கல்கத்தா தமிழ்மன்றம் பரிசு                                         :       வெள்ளிவிழா சிறுகதைப் போட்டி
        கல்கத்தா                                                                                                 முதல் பரிசு : 1977
                                                                                                                          தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
 8.   மாதத்தின் சிறந்த சிறுகதை பரிசு                             :       1975 ஜூலை
       இலக்கிய சிந்தனை, சென்னை                                                 விரதம்
 
      இலக்கிய சிந்தனை, சென்னை                                        :      1977 ஜூலை
                                                                                                                                                                                                          
                                                                                                                            வாய் கசந்தது
                                                                                                                                                                                                                           இலக்கிய சிந்தனை, சென்னை                                              :      1979 நவம்பர்
                                                                                                                             முரண்டு
9.    அமுதன் அடிகள் இலக்கியப் பரிசு                           :       1999 ஆம் ஆண்டுக்கு
                                                                                                                          வாழ்நாள் இலக்கியச் சாதனை
10.  தமிழ் இலக்கியத்தோட்டம், கனடா                            :       நதியின் பிழையன்று
        உலகத் தமிழாசிரியர்கள்                                                           நறும்புனல் இன்மை  
        நினைவுப்பரிசு                                                                                 புனைவு இலக்கியம் – 2007
              
11.  திருப்பூர் தமிழ்ச் சங்கம்                                                   :       சிறந்த சிறுகதைத் தொகுப்பு – 1994
                                                                                                                          பேய்க்கொட்டு
12.  கண்ணதாசன் விருது                                                        :       கண்ணதாசன் கழகம்,
                                                                                                                          கோவை          – 2009
13.  சாகித்ய அகாதமி விருது                                         :     சூடிய பூ சூடற்க
                                                                                                                        சாகித்ய அகாதமி -2010
14.  கலைமாமணி விருது                                                       : இயற்றமிழ் கலைஞர்-2009
                                                                                                                   தமிழ்நாடு இயல்,இசை,நாடக மன்றம்

 

டாக்டர். ஆபத்து காத்த சிவதாணு பிள்ளை

டாக்டர். ஆபத்து காத்த சிவதாணு பிள்ளை 
DRDO & MD, Brahmos AerospaceDr A Sivathanu Pillai, Distinguished Scientist & Chief Controller R&D was born in 1947.He obtained BE (Electrical) from Madras University in 1969 and received PhD in Technology Management in 1996 from University of Poona. He attended the Programme for Management Development at Harvard Business School, USA in  1991. He joined ISRO at the Space Science and Technology Centre, Thiruvanathapuram in 1969 where he worked in the area of systems engineering of launch vehicles. He assisted Dr Vikram Sarabhai in the evolution of ten year profile for space missions and was a core team member of SLV -3 project under the leadership of Dr APJ Abdul Kalam, Project Director, SLV-3. He also worked as a Senior Scientist in Aerospace Design and Dynamics Group at VSSC and later Technical Adviser to Prof Satish Dhawan for Launch Vehicles at ISRO HQrs. Development of four types of rocket motors for SLV-3 and the rocket systems, the evolution of PSLV configuration and possible options for GSLV, and direction for future ISRO launch vehicles for new missions have been his major contributions to the Indian Space Programme.

Dr Pillai joined DRDO in 1986 at the Defence Research and Development Laboratory (DRDL), Hyderabad, as Director, Planning and Programme Analysis in the Integrated Guided Missile Development Programme (IGMDP). He became Programme Director; IGMDP in August 1992 and assumed additional responsibility as Associate Director, DRDL in October 1994. He was appointed Chief Controller R&D, DRDO HQrs, New Delhi in 1996 and was elevated to Distinguished Scientist from September 1999. As CC R&D, currently he is responsible for missile laboratories for all missile projects, ranges, naval systems and certain international collaborations. He played a key role in conceiving and shaping the Indo-Russian JV Company BrahMos and is presently its Chief Executive Officer and Managing Director.

Dr Pillai has published and presented several papers in international and national journals and symposia. He is a Visiting Professor (Technology Management) at Administrative Staff College of India, Hyderabad. He is the recipient of the DRDO Scientist of the Year Award-1988, and the Dr Vikram Sarabhai Research Award in Systems Analysis-1991. He is a member of the IEEE and Astronautical Society of India.
Dr A Sivathanu Pillai, got  Padma Shri award on 23 March 2002 by Dr KR Narayanan, President of India.

 

Mrs.S.Vijayadharani
Mrs.S.Vijayadharani

Mrs.S.Vijayadharani was elected as MLA in Vilavancode constituency of Kanyakumari district in the year 2011. He belongs to INC. He secured a total of 62898 votes.