Home         Hindu Temple Kodi Maram Song       Ultimate and Only God Shiva


Meaning of Viboothi, Thiruneeru by Various Authors
 
விபூதி
-தொகுப்பு பேராசிரியர் கா.திருஞான சம்பந்தன் M.Sc., M.C.A.
 
    சைவர்களால் ஆவசியமாகச் சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் விபூதி, உருத்திராக்ஷம் என்னும் இரண்டும்.
    விபூதி என்ற பெயரிலேயே அதனுடைய மகிமை விளங்கும். "வி" என்றால் மேலானது. "பூதி" என்றால் ஐஸ்வரியம்(செல்வம்).  திருநீறு என்று மற்றொரு பெயரும் இதற்கு உண்டு.  திரு என்றால் தெய்வத்தன்மை. நீறு என்றால் வினைகளை நீறாக்குவது என்று பொருள்.  நம் வினைகளை வேரறுத்து நம்மை தெய்வ நலத்தில் இணைக்கும் சாதனமே திருநீறு ஆகும்.  அதனை மகிழ்ச்சியுடன் பூசி மகிழ்பவர்கள் அடையும் பேற்றினைக் கூறவந்த திருமூலதேவநாயனார்
    "கங்காளன் பூசுங்கவசத் திருநீற்றை
     மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
     தங்கா வினைகளும் சாருங் சிவகதி
     சிங்காரமான திருவடி சேர்வரே"
    திருநீற்றின் பெருமையை நாம் அனைவரும் உணர்ந்து உய்வு பெறும் பொருட்டு திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் "திருஆலவாய் திருநீற்றுப்பதிகம்" என்னும் அற்புதப் பாசுரத்தைத் திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்கள்.
    "மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
     சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
    தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
    செந்துவர் வாயுமை பங்கள் திருஆலவாயான் திருநீறே"
    "நீறு இல்லா நெற்றி பாழ்" என்பது ஒளவை வாக்கு.
    பசுவின் சாணத்தை அக்கினியினாலே தகித்தலால் உண்டாக்கியது வெண்மையான் திருநீறு. இதனை அணிபவர்கள் தங்களுடைய மும்மலங்கள் [ஆணவம், கன்மம், மாயை] ஆகியவைகளை சிவாக்கினியில் தகித்து வெண்மையான ஆன்மா ஆகும், முக்தி பேற்றைப் பெறுவார்கள்.
    ஞான் அக்கினியால் தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விளங்கும் சிவத்துவப் பேற்றிற்கு அறிகுறி விபூதி
    திருநீற்றை முக்குறியாக அணிகிறோம். ஏனென்றால் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களை வேரோடு நீக்கினால் தான் நாம் முக்திக்கு தகுதி உடையவர் ஆகிறோம் என்பதை அக்குறி உணர்த்துகிறது.
    விபூதியை பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும், வில்வக் குடுக்கையிலேனும், சுரைக்குடுக்கையிலேனும் எடுத்து வைத்துக் கொண்டு தரித்தல் வேண்டும்.
    விபூதியை வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.
    விபூதியை நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து "சிவ சிவ" என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் தரித்தல் வேண்டும்.
    வாய்ங்காந்து கொண்டும், தலை நடுங்கிக் கொண்டும், கவிழ்ந்து கொண்டுந் தரிக்கலாகாது.  ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனுந் தரிக்கலாகாது.
    சந்தியாகால மூன்றினும், சூரியோதயத்தினும், சூரியாஸ்தமயத்தினும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், மல சல மோசனஞ் செய்து செளசம் பண்ணி ஆசமித்த பின்னும், தீக்ஷ இல்லாதவர் தீண்டிய போதும், விபூதி ஆவசியமாகத் தரித்தல் வேண்டும்.
    கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது.
    விபூதி தரியாதவருடைய முகம் சுடுகாட்டுக்குச் சமமாகும்.
    திருநீற்றின் பெருமையும் அதனை அணிவதால் வரும் நன்மைகளும்
      1. உடல் நாற்றத்தைப் போக்கும்.
     2. தொத்து நோய்க் கிருமிகளைக் கொல்லும்.
      3. தீட்டுக் கழிக்கும்.
      4. உடலைச் சுத்தம் செய்யும்.
     5. வியாதிகளைப் போக்கும்.
      6. பில்லிசூனியம், கண்ணேறு பாதிக்காது காக்கும்.
     7. முகத்திற்கு அழகைத் தரும்.
     8. ஞாபக் சக்தியை உண்டாக்கும்.
     9. புத்திக் கூர்மையைத் தரும்.
    10. ஞானத்தை உண்டாக்கும்.
     11. பாவத்தைப் போக்கும்.
     12. பரக்தியைத் தரும்.
   
    "மால் அயன் இந்திரன் மற்றைய அமரர் மலர் மகளிர் சசி மற்றை வானக்
    கோல மடவார் இயக்கர் கந்தருவர் இராக்கர் குல அரசர் வேதச்
    சீல் முனிவரர் மற்றோர் இவருளரும் தவமுடையீர் திருவெண்ணீறு
    சாலவும் உத்தூளனம் முப்புண்டாம் நாள்தோறும் போற்றித் தரியார் யாரே"
    "பத்தியொடு சிவ சிவ என்று திருநீற்றைப் பரிந்து கையால் எடுத்து
     பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு பருத்தபுயமீது விழ
    நித்தமும் விரல்களால் நெற்றியில் அழுந்தலுற நினைவாய்த் தரிப்பவர்க்கு
    நடுவினை அணுகாது, தேகம் பரிசுத்தமாம், நீங்காமல் நிமலன் அங்கே
    அத்தியோடு நித்தம் விளையாடுவான், முகத்திலே தாண்டவக் செய்யும் திரு
    சஞ்சலம் வராது, பரகதி உதவும், இவனையே சக்தியும் சிவனும் எனலாம்
    மத்தினிய மேரு என வைத்து அழுதினைக்கடையும் மால்மருகனான முருகா
    மயிலேறி விளையாடும் குகனே பொன்வயல் நீடு மலைமேவு குமரேசனே" 
    அணைத்து லோகத்திலும் அங்குள்ள தெய்வங்களும், தேவர்களும், அடியார்களும் திருநீறு அணிகிறார்கள்.
    "கண்ணன் வெண்பூதி பூசிக் கண்டிகை மாலை சாத்திப் புண்ணியத்
    திங்கள் வேணி யானிருபாதம் போற்றி"
    எனக் கண்ண அவதாரத்திலும் கண்டிகையும் நீறும் அணிந்தனர் - என்று கூறியிருப்பதையும் வாயு சங்கிதையில் உத்திர காண்டத்திலும், மகாபாரதத்தில் அநுசாசன் பர்வத்தில் 14-ஆம் அத்தியாயத்திலும் கூர்ம புராணத்திலும், ஸ்ரீ கிருஷ்ணர் உபமன்யு மகாமுனிவரிடம் சிவதீட்சை பெற்று சிவபூஜை செய்து, தான் விரும்பிய பலனைப் பெற்றார் என்று கூறியிருப்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.  எனவே ஸ்ரீ மன் நாராயணன் சிவஸ்துதி செய்பவனாகவும், சிவ சின்னமான விபூதியை மூன்று பட்டைக் கோடுகளாக நெற்றியில் தரித்தவராகவும், ருத்திரனுடைய கண்ணிற்குச் சமமானதாகவுள்ள ருத்திராக்ஷ மணிமாலையை அணிந்தவராகவும் இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
    விபூதிக்கு பஸிதம், பஸ்மம், க்ஷரம், இரக்ஷ என்ற பெயர்களும் உண்டு. எல்லாப் பாவங்களையும் போக்குதலால் பஸ்மம் எனவும், பிரகாசித்தலால் பசிதம் எனவும். ஆபத்தைப் போக்கலால் க்ஷரம் எனவும், பூதப்பிரேத பிசாச பிரம ராக்ஷஸ அபஸ்மார பவ பீதிகளின்றும் காத்தலால் இரக்ஷ எனவும் திருநாமங்கள் வந்தன.
    இவ்வளவு மேன்மை பொருந்திய விபூதி யணிவதிலும் மேலான சிவபுண்ணியம் யாதுளது?
 
 
for more details
visit
 

horizontal rule

சைவபூஷண சந்திரிகை
--------------
யாழ்ப்பாணத்து மேலைப்புலோலி
சைவசித்தாந்த மகாசரபம்
நா.கதிரைவேற் பிள்ளை
இயற்றியது

--------------
    இந்த நூலிலே மேற்கோளாகக் காட்டப்பட்ட
நூல்கள்
1. தேவாரம் 18. அத்தியாத்ம இராமாயணம்
2. திருவாசகம் 19. மகாபாரதம்
3. திருப்பல்லாண்டு 20. சூரசங்கிதை
4. பஸ்மசாபாலவுபநிடதம் 21. மானவசங்கிதை
5. பராசரஸ்மிருதி 22. உபதேசகாண்டம்
6. சைவபுராணம் 23. பிரமோத்தரகாண்டம்
7. இலிங்கபுராணம் 24. சிவதருமோத்தரம்
8. கூர்மபுராணம் 25. வாயுசங்கிதை
9. கந்தபுராணம் 26. அகத்திய பக்தவிலாசம்
10. பெரிய புராணம் 27. சைவசமயநெறி
11. தணிகைப்புராணம் 28. பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடல்
12. பேரூர்ப்புராணம் 29. திருப்போரூர்ச் சந்நிதி முறை
13. திருவிரிஞ்சைப்புராணம் 30. உருத்திராக்க விசிட்டம்
14. சிவஞானபோதம் 31. சடகோபர் திருவாய்மொழி
15. சிந்தாந்தசிகாமணி 32. பேயாழ்வார் மூன்றாந் திருவந்தாதி
16. சூதசங்கிதை 33. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி
17. அத்தியாத்ம இராமாயணம்  
--------------------------------------------------------------------------------
பதிப்புரை
    சைவபூஷண சந்திரிகை என்னும் இச்சீரியநூல் 57 ஆண்டுகளுக்கு முன் அக்காலத்தில் நீதிபதியாக நிலவிய வே. மாசிலாமணிப்பிள்ளை அவர்களின் வேண்டுகோளின்படி மாயாவாததும்ச கோளரி சதாவதானம் நா.கதிரைவேற்பிள்ளை அவர்களால் எழுதி 1900-ம் ஆண்டில் அச்சிடப்பட்டது.  இதன்கண் சைவத்தின் மேன்மையும் அதன் சாதனங்களாகிய விபூதி, உருத்திராக்கம், பஞ்சாக்ஷரம் தின அநுஷ்டானம் முதலியவற்றின் சிறப்புகளையும் விளங்கும்படி எழுதியிருப்பது மிகவும் போற்றத்தக்கது.  இந்நூல் தோன்றியபோது அக்காலத்துப் பெரியோர்கள் இதனைப்போற்றிச் சிறப்பித்தனர்.  இத்தகைய அருமையான நூல் இப்போது மறைந்து விடாதபடி அச்சிட நேர்ந்தது.  ஆசிரியர் நாவலரின் மாணவர் வழிவந்தவராகையால் அவர்களுடைய அச்சுக்கூடப் பிரசுரமாக வரலாயிற்று.  இதனைச் சிவநேயர்கள் ஆதரிப்பாராக.
 ச. பொன்னுஸ்வாமி,
தருமபரிபாலகர்.

--------------------------------------------------------------------------------
சிறப்புக் கவி
ஸ்ரீலஸ்ரீ. ஆறுமுகநாவலர் அவர்களின் மாணாக்கரும்
இந்நூலாசிரியரின்
ஆசிரியர்களுள் ஒருவருமாகிய
யாழ்ப்பாணத்து நல்லூர்
வித்துவசிரோமணி
க.தியாகராசபிள்ளை அவர்கள்
இயற்றியன.
பொன்பணியும் பொறிப்பணியு மணிப்பணியு
    மிரும்பணியிற் பொறுத்த மாயன்
வன்பணியு மறைப்பணியு மறைபணியு
    முணராத மதியத் தேவ
னென்பணியு மிரும்பணியும் பெரும்பணியிற்
    கொளுமுதல்வ னெந்தை யேழை
யென்பணியு மிடத்தணியுங் கரும்பணியின்
    மொழிபணியு மேன்ற நாதன்.                    (1)
வருமீற்றி னொருநுதலி னெரிநீற்றி
    னுளதாகி வைப்பார் வைகுங்
கருநீற்றவ் வருளூற்றவ் விழிபூற்றின்
    வயிற்றோன்றிக் கருணை மேனி
யுருவேற்று வினைநீற்றுந் திருநீற்றின்
    விழிமணியி னுண்மை யோர்ந்து
வுருவேற்றி மலம்பாற்றித் திருவேற்கும்
    பெருங்கருணை யுலகத் தாக.                  (2)
விண்மணியிற் புகழணிமன் னரசணியிற்
    சிறக்குமணி மெய்மை சான்ற
கண்மணியிற் றிருநீற்றிற் களிக்குமணி
    குவளையணி களமராமெங்
கண்மனிவேற் பிள்ளைதவத் தணுமாசி
    லாமணியுங் கருதிக் கேட்ப
வண்மணிசை வப்பெரியோ ரணியுமணி
    நிலவவுஞற் றிட்டான் மாதோ.
அன்னவன்யா ரெனினம்மாட் டடைந்துபெருங்
    க்லைபலவு மறிந்தோன் மெய்கண்
டன்னவனெம் மவர்க்கருளுஞ் சிவஞான
    போதமுத லறிவு நூல்கண்
முன்னவன்பிற் றெரிந்துபோ திப்பவனஞ்
    சிவகுகனை முன்னுந் தாசன்
நன்னமா யாவாத கோளரிநங்
    கதிரைவே னாவல் லோனே.

--------------------------------------------------------------------------------
    உ
சிவமயம்
சைவபூஷண சந்திரிகை
காப்பு
வேத சிவாகமத்தான் மெய்ச்சமய மென்றுதெளி
போதசிவ சித்தாந்த பூடணவொண் மைக்கருளு
மீரா யிரமருப்பி யேறிவிளை யாட்டருளு
மோரா யிரமருப்பி யோர்.
கடவுள் வணக்கம்
பரமசிவன்
சிவஞானத் தவர்க்கருளும் பதியாவ னாகமத்துச் செல்வன் யாவன்
தவஞால முதலுலகை மூவினையிற் கொண்டவன்யார் தாணு வாகி
அவஞானத் தவர்க்கறியா வண்ணலெவன் றிருநீறு மக்கந் தானுந்
தவஞானக் கொருகுறியாத் தந்தவன்யா ரவன்சரணந் தலைமேற் கொள்வாம்.
வழிபடு கடவுள்
ஒருமானை வலத்தானை யொருவானை யிடத்தானை யுலகம் போற்ற
வருமானை முகத்தானைத் துணையானை யயில்பிடித்த வலத்தான் றன்னைப்
பெருமானை யெனதுளக்காட்டமர்வானை யெமக்கருளைப் பெருக்கு வானைத்
தருவானைப் பெரும்புதுச்சந் நிதியானைச் சாவணனைச் சார்ந்து வாழ்வாம்.
விபூதி
சித்தாந்த மெய்ச்சமயச் சிவநெறிக்கு வித்தாகித் திருமாலாதி
பெத்தாந்தக் கணத்தவர்க்கு மெவ்வெவர்க்கும் பெருவாழ்வு பெருக்கி மும்மைக்
கொத்தாந்த மலமுருக்குங் குறிகாட்டி நித்தியமாய்க் கொண்டார்க் குற்ற
பித்தாந்த மதப்பிணியைத் தபுமருந்தாந் திருநீற்றைப் பேணியுய்வாம்
உருத்திராக்கம்
நிலைகலங்கா தெங்குநிறை யருட்கடலின் வயிற்றோன்றி நிகரின் ஞானத்
தலையொளிகான் றியாம்பிரம மெனத்தடுமா றும்மிருள்கடங்கா தோட்டி
விலைமதித்தற் கரியதுவாய் வேண்டுவார் வேண்டியன விழைவி னீந்து
மலைமகணா யகன்றிருக்க ணருட்பேற்றைக் குறிக்கவரு மணியைத் தாழ்வாம்.

--------------------------------------------------------------------------------
நூல்
சைவபூஷணம் விபூதி ருத்திராக்கங்களே
பரமசிவ னமலன் பத்தர்க்குச் சின்ன
முருவுடலிற் கண்டியு நீறும்.
    சிவபெருமான் பிறப்பு இறப்பு இன்றி என்றும் உள்ளவர்.  எங்கும் நிறைந்தவர்; எல்லாம் செய்யவல்லவர்; இயல்பாகவே யெல்லாம் அறிபவர்.  தமது அநுபவத்தின் பொருட்டுப் பிறிதொன்றையும் வேண்டாதவர்; தம்வயமுடையவர்; ஆன்மாக்களிடத்துள்ள இரக்கமே திருமேனியாக வுடையவர்; இவ்விலக்கணங்களை யுடையவர் அவர் ஒருவரே யன்றி வேறில்லை.  ஆதலால் அவரே பசுபதி என்று மெய்யன்புடன் வழிபடுகின்றனர் சைவர் அல்லது சிவனடியார் என்று கூறப்படுபவர்.  ஒருவனையே தனக்கு நாயகனாகக் கொண்ட பதிவிரதையானவள் தன்னாபகனாற் கொடுக்கப்பட்ட திருமங்கிலியம் மோதிரம் முதலியவற்றைத் தன் கற்புநிலைக்குச் சாதனமாகத் தரிந்தொழுகுவள்.  அதுபோலச் சிவபெருமானையே பரமபதி யெனக்கொண்டு வழிபடும் ஒவ்வொருவருக்குந் தத்தம் அன்பினிலைக்கு அடையாளமாகத் தரிக்கத் தக்கன சிவசின்னங்களாகிய விபூதி உருத்திராக்ஷம் என்னும் இரண்டுமேயாம்.  எவள் திருமங்கிலிய முதலிய அடையாளங்களைத் தரித்தற்குக் கூசுகின்றனளோ அவள் குலமகளெனப்படான்.  மற்றைய ஆபரணங்க ளெல்லாவற்றைபுந் துறந்திருந்தாலுந் திருமங்கிலியத்தைக் குலமகளிர் துறந்திருக்கார்.  அதுபோல எவ்வணிகளையுந் தரியாமலிருந்தாலுஞ் சிவசின்னங்களைச் சிவனடியவர் (சைவசமயிகள்) என்றுள்ளார் தரியாதிருத்தலாகாவாம்.  ஆதலால் சைவசமயிகட்கு விபூதி உருத்திராக்க தாரணம் இன்றியமையாததேயாம்.
விபூதிருத்திராக்கஞ் சிவவடிவமே
விபூதி உருத்திராக்கங்கள் சிவசின்ன மெனவும், திருவேடம் எனவும்படும்.
    "செம்மலர் நோன்றாள் சேர லொட்டா
        வம்மலங் கழீஇ யன்பரொடு மரீஇ
    மாலற நேய மலிந்தவர் வேடமு
        மாலயனுந் தானு மரனனெத் தொழுமே."
எனஞ் சிவஞானபோதஞ் செப்புதலால், அவை யிரண்டுஞ் சிவபெருமானென்றே கொள்ளற்குரியனவாம்.  காமக் கிழத்தியரது வடிவிலே காணப்படும் ஆடை, சாந்து, அணிகலன் முதலாயின காமுகரை வசீகரித்து இன்பஞ் செய்யுமாறு போல மெய்யுணர் வுறுவாரைக் காட்சிமாத்திரையானே வசீகரித்து இன்பஞ் செய்தல்பற்றிச் சிவபத்தி யுடையார்க்கு இவை திருவேடமாகக் கொள்ளப்பட்டனவாம்.
சேலுங்கயலுந்திளைக்குங் கண்ணாரிளங்கொங்கையிற் செங்குங்குமம்
போலும்பொடியணிமார்பிலங்குமென்றுபுண்ணியர்போற்றிசைப்ப.
                                           - திருப்பல்லாண்டு.
    அக்கினி சிவபெருமானது வடிவமாகும்.  சந்திரன் யாகவடிவாய் விளங்குவன்.  ஆதலால் அதனை அமிர்தமென்று கூறுவர் பெரியர்.  இவ்வுலகங்கள் யாவும் அக்கினியாற் சுடப்பாடு வெந்து சாம்பரானமையாற்றான் பரிசுத்தமடைந்தது.  அக்கினியினிடத்து அவிபெய்து உயர்வை யடைந்தவர்கள் விபூதி தரித்தலாகிய பாசுபத விரதத்தை யநுட்டித்தனர்.  இது பற்றியன்றோ தென்புலத்தாரும் அக்கினியை யுண்பார்கள்.  தேவர்கள் சந்திரகலையை அமிர்தமாகப் பானம்பண்ணி வருகின்றனர்.  ஆதலால் உலகம் அக்கினி சொரூபமே.  அவ்வக்கினி சிவபெருமானது திவ்வியவடிவேயாம்.  சந்திரன் சிவசத்தி வடிவாகும்.  இதனாற்றான் பரிசுத்தம் வாய்ந்த சிவாக்கினியினிடத்தினின்றுந் தோன்றிய விபூதியைச் சிவபெருமான் தமது திருமேனிக்கண் தரித்தனர்.  ஆதலின் அது பரிசுத்தமுள்ளதும், அதனைச் செய்வதும், அமிர்தம்போ லெவரானுங் கைக்கொள்ளப்படுவதும், புத்தி முத்திகளைக் கொடுப்பதுமாகும்.
ஆதலாலுலகமழலினல்வடிவேயவ்வழலெமதுருவாமாற்
நோதறுசேர்மன்றேவிநல்வடிவாங்கொழுஞ்சுடரழலிடைப்பட்ட
வேதமினீற்றையெமதுமெய்யணிவோ மெறிதிரைக்கருங்கடலுடுத்த
தீதிலாவுலகநீற்றினையணிந்தேதீர்த்திடுந்தீவினைச்சிமிழ்ப்பே.
                                            -இலிங்கப்புராணம்.
தேவாதியருஞ் சிவசின்ன தாரணர்
    விட்டுணு, பிரமன், இந்திரன், தேவர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கந்தருவர், வித்தியாதரர், நாகர், கருடர் முதலிய கணத்தவர்களும், மனிதருள் அநேகருமாகிய சிவனடியவர் யாவருஞ் சிவசின்னங்களைத் தரித்திருக்கின்றனர் என்பது வேதாகம உபநிடத மிருதிபுராண இதிகாசாதி சாத்திரங்களால் அறியக் கிடக்கின்றது.
மாலயனிந் திரன்மற்றை யமரர்மலர் மகளிர்சசி மற்றை வானக்
கோலமட வாரியக்கர் கந்தருவ ரரக்கர்குல வசுரர் வேதச்
சீலமுனி வரர்மற்றோ ரிவருளருந் தவமுடையீர் திருவெண்ணீறு
சாலவுமுத்தூளனமுப்புண்டரநாடொரும்போற்றித்தரியார்யாரே.
                                            -சூதசங்கிதை.
விஷ்ணுவும் விபூதிருத்திராக்க தாரணரே
    சிலர், ஆசாரியருட் சிறந்தவராய், சிவசத்திகளுளொருவராய், சிவபத்தருட் சிறந்தவராய், கர்த்தற் கடவுளராய் விளங்கும் எம்பெருமாளுக்கும் அவனை வழிபடுவார்க்கும் விபூதி ருத்திராக்கதாரணம் தக்கதன்று என்கின்றனர்.  "பஸ்மதிக் தாங்கா ருத்திராக்ஷ பரணா: - தக்ஷணாயாந் திகி விஷ்ணு" எனவரும் (அதர்வணவேதம்) பஸ்மஜாபால உபநிடத சுலோகத்தானே திருமால் ஸ்ரீகாசி க்ஷத்திரத்திலே தென்றிசைக்கணிருந்து விபூதிருத்திராக்க தாரணமுடையராய் உபாசிக்கின்றனர் என்பது பெறப்படலானும், "சிவேநவிஷ்ணு நாசைவ" எனவரும் சூதசங்கிதைச் சுலோகத்தானே திருமாலுக்கும் அவரது தேவியார்க்குஞ் சைவ தருமமும், விபூதி தாரணமுங் கூறப்பட்டமையானும், இன்னும் இராமாவாதார மெடுத்த காலத்து "த்யாத்வா ரகுபதிம் க்ருத்தம் காலாநல மிவாபரம் - பீத க்ருஷ்ணாஜிநதரம் பஸ்மோத்துளன விக்ரஹம்" என்னும் இராமாயண சுலோகத்தானும், "ஸ்வர்ண வர்ண ஜடாபாரம் ஸாக்ஷத் ருத்ர மிவாபரணம் - பஸ்மோத் தூளித ஸர்வாங்கம் த்ருஷ்டுவா காம வசங்கதா" என்னும் அத்தியாத்மராமாயண சுலோகத்தானும், விபூதி தரித்திருந்தனரென்பது வெளியாகலானும், "கண்ணன்வென்பூதி பூசிக் கண்டிகை மாலை சாத்திப் - புண்ணியத் திங்கள்வேணி யானிரு பாதம் போற்றி" எனக் கண்ண அவதாரத்திலுங் கண்டிகையு நீறுமணிந்தனர் என்று கூர்மபுராணங் கூறுவதனானும், "சிவஸ்ய விஷ்ணோர் தேவாநாம்" எனவரும் பராசரஸ்மிருதி சுலோகத்தானே விபூதியைத் திரிபுண்டாமாகத் தரிப்பின்கேசவமூர்த்திக்கும் இலக்குமிதேவியார்க்குந் திருப்தியுண்டாகிறது எனத் தெரிதலானும், ஏனைய பிரமாண நியாயங்களானும் விஷ்ணுவுஞ் சிவசின்ன தாரணரும், சிவசின்ன தாரணப் பிரியருமாகலின், அவற்கும் அவனை வழிபடுமடியார்க்குஞ் சிவசின்னங்கள் உரியனவாமென்று தெளியப்பட்டது.
விபூதி வரலாறு
    திருவருளுருவாகிய உமாதேவியார் தமக்குப் பத்தினியாகத் தோன்ற, ஆணவமலத்தை நீக்கியருளும் வேதியராகிய சிவபெருமான் பிரளய வெள்ளமே நீராகவும், அளவில்லாத அண்டங்களே மண்டபங்களாகவும், சமுத்திரத்தாற் சூழப்பட்ட பூவுலகமே வேதிகையாகவும், விஷ்ணு, பிரமன், அரி முதலிய தேவர்கள் யாவரும் அவிப்பாகமாகவும், உயிர்களே பசுக்களாகவுங் கொண்டருளித் தமது நெற்றியாகிய குண்டக்கணுள்ள அக்கினிக் கண்ணினின்றும் அக்கினியை மூட்டி யாகஞ் செய்தனர். அந்த யாகத்தினின்றுந் தோன்றிய வெண்திருநீற்றை அகங்கார மமகாரமாகிய அகப்புறப் பற்றுக்களழியுமாறு விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என்னும் மூவகை ஆன்மாக்களுஞ் சரீரத்தில் தரிக்குமாறு அமைத்தனர் என நூல்கள் கூறாநிற்கும்.
    பூதியா முறைமையும் புகலக் கேட்டியாற்
    கோதிலா மனுமுறைக் கொற்ற வேந்தனே
    பாதியாள் சத்திபத் தினியின் வைகுற
    வேதிலா ணவந்தபு மிணையில் வேதியன்.
    ஊழியே பாணிக ளுலப்பி லண்டமே
    கேழிலா மண்டபங் கேழ்த்த வேதிகை
    யாழிசூழ் புலியலி யரிமெய் யாதியா
    வாழிமா மெய்மைவண் பசுக்க ளாலியா.
    நெற்றியங் குண்டத்து நெடித டங்கிய
    பொற்றநீள் விழியெரி புணர்த்து வேள்விசெய்
    தற்றமில் வேள்வியி லவிர்வெண் பூதியைப்
    பற்றற வுயிர்க்கெலாம் படிவத் தாக்கினான்.
                                -தணிகைப் புராணம்
விபூதி தாரண பலம்
    விபூதியை யணிந்தவர் எவ்விடத்திற் போசனஞ் செய்கின்றாரோ அவ்விடத்திற் பார்வதி சமேதராகிய பரமசிவனும் உண்கின்றனர்.  உடம்பு முழுதுந் திருநீற்றை யணிந்தவரை எவர் பின்செல்கின்றனரோ அவர்கள் மகாபாதகராயினும் பரிசுத்தராகின்றனர் எனச் சூரசங்கிதை கூறுகின்றது.  காலை, உச்சி, மாலையென்னு முக்காலங்களினுந் தரிக்கின்ற மெய்யன்பர் எக்குலத்தவராயினும் அவரைச் சிவபெருமான் என்றே பாவிக்கக்கடவர் என மானவ சங்கிதையிற் சொல்லப்பட்டிருக்கின்றது. மெய்யன்புடன் விபூதிதரிப்பவரைச் சிவபெருமான் நீங்காது நிற்பர்.  அதனால் சர்ப்பம், சூரியன் முதலிய கிரகங்கள், நட்சத்திரங்கள், திசைத் தெய்வம், யமன், காலன், யமதூதர், அக்கினி, கொடுநோய்கள், அவுணர், இடி, பூதங்கள், சிங்கம், புலி, கரடி முதலிய கொடியனவற்றால் வருந் துன்பங்கள் அவரை யணுக மாட்டா வாம்.  அவர் இருவினைகளையும் வென்று சிவஞானம் பெற்று முத்தியடைவார் என்பது சத்தியம், முக்காலுஞ் சத்தியமே யாம்.
    பகைபிணி மண்ணைபன் மந்தி ரத்தினா
    மிகையறன் கடையுள வெருட்சி பித்திடர்
    வகையெனைத் தையுமற மாற்றி யாவர்க்குந்
    தகைநல மளிப்பது தவள நீறரோ.
                           - தணிகைப் புராணம்
    விபூதி தரிக்குங் காலங்களில் ஓதவேண்டிய திருநீற்றுப் பதிகத்தைக் காட்டுவாம்.  அது திருவருண்ஞானச் செல்வராய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாராற் கூன்பாண்டியனுடைய வெப்புநோயைத் தீர்த்தற்காகவும், எம்மனோரது பிறவித் துன்பங்களை வேரறக் களைதற்காகவும் ஓதியருளப்பட்டது.  ஆதலால் தரிக்குங் காலத்து ஒவ்வொருவரும் அதனை மெய்யன்புடன் ஓதக்கடவர்.
திருநீற்றுப் பதிகம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்.
மந்திரமாவதுநீறு வான்வர்மேலதுநீறு
சுந்தரமாவதுநீறு துதிக்கப்படுவதுநீறு
தந்திரமாவதுநீறு சமயத்திலுள்ளதுநீறு
செந்துவர்வாயுமைபங்கன் றிருவாலவாயான்றிருநீறே.        (1)
வேதத்திலுள்ளதுநீறு வெந்துயர்தீர்ப்பதுநீறு
போதந்தருவதுநீறு புன்மைதவிர்ப்பதுநீறு
வோதத்தகுவதுநீறு வுண்மையிலுள்ளதுநீறு
சீதப்புனல்வயல்சூழ்ந்த திருவாலவாயான்றிருநீறே           (2)
முத்திதருவதுநீறு முனிவரணிவதுநீறு
சத்தியமாவதுநீறு தக்கோர்புகழ்வதுநீறு
பத்திதருவதுநீறு பாவலினியதுநீறு
சித்திதருவதுநீறு திருவாலவாயான்றிருநீறே`               (3)
காணவினியதுநீறு கவினைத்தருவதுநீறு
பேணியணிபவர்க்கெல்லாம் பெருமைகொடுப்பதுநீறு
மாணந்தகைவதுநீறு மதியைத்தருவதுநீறு
சேணந்தருவதுநீறுதிரு வாலவாயான்றிருநீறே              (4)
பூசவினியதுநீறு புண்ணியமாவதுநீறு
பேசவினியதுநீறு பெருந்தவத்தோர்களுக்கெல்லா
மாசைகொடுப்பதுநீறு வந்தமதாவதுநீறு
தேசம்புகழ்வதுநீறு திருவாலவாயான்றிருநீறே.             (5)
அருத்தமதாவதுநீறு வவலமறுப்பதுநீறு
வருத்தந்தணிப்பதுநீறு வானமளிப்பதுநீறு
பொருத்தமாவதுநீறு புண்ணியர்பூசும்வெண்ணீறு
திருத்தகுமாளிகைசூழ்ந்த திருவாலவாயான்றிருநீறே        (6)
எயிலதுவட்டதுநீறு லிருமைக்குமுள்ளதுநீறு
பயிலப்படுவதுநீறு பாக்கியமாவதுநீறு
துயிலைத்தடுப்பதுநீறு சுத்தமதாவதுநீறு
வயிலைப்பொலிதருசூலத் தாலவாயான்றிருநீறே.           (7)
இராவணன்மேலதுநீறு வெண்ணத்தகுவதுநீறு
பராவணமாவதுநீறு பாவமறுப்பதுநீறு
தராவணமாவதுநீறு தத்துவமாவதுநீறு
வராவணங்குந்திருமேனி யாலவாயான்றிருநீறே             (8)
மாலொடயனறியாத வண்ணமுமுள்ளதுநீறு
மேலுறைதேவர்கடங்கண் மெய்யதுவெண்பொடிநீறு
வேலவுடம்பிடர்தீர்க்கு மின்பந்தருவதுநீறு
வாலமதுண்டமிடற்றெம் மாலவாயான்றிருநீறே              (9)
குண்டிகைக்கையர்களோடு சாக்கியர்கூட்டமுங்கூடக்
கண்டிகைப்பிப்பதுநீறு கருதவினியதுநீறு
வெண்டிசைப்பட்டபொருளா ரேத்துந்தகையதுநீறு
வண்டத்தவர்பணிந்தேத்து மாலவாயான்றிருநீறே.            (10)
ஆற்றலடல்விடையேறு மாலவாயான்றிருநீற்றைப்
போற்றிப்புகலிநிலாவும் பூசுரன்ஞானசம்பந்தன்
தேற்றித்தென்னனுடலுற்ற தீப்பிணியாயினதீரச்
சாற்றியபாடல்கள்பத்தும் வல்லவர்நல்லவர்தாமே.            (11)
திருச்சிற்றம்பலம்

--------------------------------------------------------------------------------
(1) மந்திரம் - மந் - நினைப்பவனை, திர - காப்பது, நீறு - பாவங்களையெல்லாம் நீறாக்குவது.  தந்திரம் - சிவாகமம். செந்துவர் - செந்நிறமுடைய பலளம்.
(2) போதம் - ஞானத்தெளிவு
(3) சித்தி - அணிமா முதலிய அட்டமாசித்திகள்.
(6) அருத்தம் - மெய்ப்பொருள்.
(7) எயிலது - எயில் - மும்மதில். அது - பகுதிப்பொருள் விகுதி. அட்டது - அழித்தது. அயில் - கூர்மை
(8) இராவணன் - அழுதலைச் செய்தவன், இலங்கையரசன்.  பரா - பரையின், வணம் - வடிவம்.
(10) குண்டிகைக்கையர் - சமணர், சாக்கியர் - புத்தர், கண்திகைப்பிப்பது என்க.
(11) அடல் - வெற்றி. புகலி - சீகாழி. தென்னன் - கூன்பாண்டியன்.

--------------------------------------------------------------------------------
to be continued
for more details
www.geocities.com/kathirvelpillai

<pasupathi.k.pillai...com> wrote:
 
----- Original Message -----
From: sivakalainataraja
To: saivaneri.yahoogroups.com
Sent: Tuesday, February 14, 2006 1:21 PM
Subject: [saivaneri] any separate rules for women applaying viputhi(thirunir)

 
namashivaya.iam  saivite, i like to know any special or individual
method of apply viputhi for  women? now iam  applaying viputhi(mixed
with some water) on my fore head , neck, and three parts of my
hands.. some of them says women can't wear viputhi mixed with water??
is it correct?  if any body knows the rules of applay viputhi please
reply to me. i am  also want to know how many places(on body) can
women took viputhi. if there was any book recarding this, please sent
the name and publisher. sivakalai

 

horizontal rule

 
தரிக்கக்கூடாத விபூதிகள்
    ஒரு கையால் வாங்கிய விபூதியும், விலைக்குக் கொண்ட விபூதியும், சிவதீக்ஷ யில்லாதவர் கொடுத்த விபூதியும், கருநிறவிபூதியும், செந்நிற விபூதியும், பொன்னிற விபூதியும், புகைநிற விபூதியுந் தரிக்கலாகாது.  சிவதீக்ஷ யில்லார் கொண்டுவந்த விபூதிப் பிரசாதத்தை யொருபாத்திரத்தில் வைப்பித்து, அதனைப் பத்திர புட்பங்களால் அருச்சித்து நமஸ்காரஞ் செய்து எடுத்துத் தரித்தல் வேண்டும்.  தீக்ஷ முதலியவற்றால் தம்மினின்றும் உயர்ந்தவரா யிருப்பின் அவரை நமஸ்கரித்து வாங்கித் தரித்தல்வேண்டும்.  ஆசாரியராயின் மூன்று அல்லது ஐந்துதரம் நமஸ்கரித்து எழுந்து கும்பிட்டு வாங்கித் தரித்து பின்னரும் நமஸ்கரிக்க வேண்டும்.
தரிக்கும் நியமம்
    1சமயி பிராதக்கால சந்தியொன்றிலேயே நீரிற்குழைத்துத் தரிக்கக்கடவன்.  2புத்திரன் அதனோடு சாயங்கால சந்தியினும் நீரிற்குழைத்து அணிக.  3சாதகனென்பான் அவ்விரண்டனோடு மத்தியான சந்தியினும் அங்ஙனஞ் செய்யக் கடவன்.  4ஆசாரியன் அம்மூன்றனோடு அர்த்தராத்திரி சந்தியினும் நீர்சேர்த்து இடக்கடவன் என்று கூறுவாருமுளர்.  யாவரும் இரு வஸ்திரந் தரித்து நீராடி ஈரம் துவட்டி விபூதி தரிக்கக் கடவர்.  ஈரவஸ்திரத்தையேனும் ஒருவஸ்திரத்தையேனும் உடுத்துக் கொண்டும், கெளபீனந் தரியாமலும், நிருவாணமாக இருந்து கொண்டும்ம் விபூதி தாரணஞ் செய்யலாகாது.  அங்ஙனஞ் செய்யின் நிஷ்பலமாகும்.  தரிக்கும் இருவஸ்திரமும் சுத்தமுள்ளனவாய், வெண்ணிறத்தனவாய், உலர்ந்தனவாயிருக்கவேண்டும்.  நைட்டிகப் பிரமசாரியம் சந்நியாசியும் யாசகராய் வேறுவஸ்திர மில்லாதிருக்கின் ஒரு வஸ்திரத்தையே இருவஸ்திரமாகப் பாவனை செய்து  தரிக்கக்கடவர்.  அதுவும் ஈரவஸ்திரமாயின் சூரிய குரூரமந்திரத்தினாலே உலர்ந்ததாக அபிமந்திரித்து, ஓம் சிவாய நம என்று சலத்தைப் புரோக்ஷத்து, ஓம் கவசாயநம என்று தலையிற் போட்டு, மகாமுத்திரையுந் தேனுமுத்திரையுங் காட்டி, ஓம் அஸ்திராயபடு என்று தலையையும், ஓம் இருதயாய வெளஷடு என்று மற்றை அங்கங்களையுந் துவட்டக்கடவர்.  கோயினாலே ஸ்நானம்பண்ண இயலாதவருந் தலைதொடங்கிக் கால்வரையும் சொல்லியபடி துவட்டுதலாகிய காபிலஸ்நானத்தை முடித்துக் கொண்டு தரிக்கக்கடவர்.  தரிக்குமிடத்து நுரை, குமிழி, நுண்ணிய புழு என்னு மிவையுள்ள நீரும், வடித்தொடாத நீரும், இழிகுலத்தார் தீண்டிய நீரும், கலங்கள் நீரும், பாசிநீரும், உவர்நீரும், வெந்நீரும், பழமையாகிய நீரும், சொறி நீரும், கூவல் நீரும் ஆகாவாம்.  சுத்த சலங்கொண்டு தானிருக்கும் பூமியை ஓம் அஸ்திராயபடு என்று சுத்திசெய்து, ஆசனத்திலே கிழக்கு நோக்கியாயினும் வடக்கு நோக்கியாயினும் இருந்துகொண்டு, ஓம் கணபதியே நம என்று முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்றுதரங் குட்டி, ஓம் குருப்பியோநம என்று நமஸ்கார முத்திரையினாலே கும்பிடுக.

--------------------------------------------------------------------------------
    1.சமயி என்பவன் சமயதீக்ஷ பெற்றுச் சிவாகம விதிப்படி நித்தியகருமஞ் செய்பவன்.
    2.புத்திரன் அதனோடு விசேட தீக்ஷயும் பெற்றுத் தருப்பணம், சிவபூசை, அக்கினிகாரிய முதலியன செய்பவன்.
    3.சாதகனாவான் அவ்விரண்டனோடு நிருவாண தீக்ஷயும் பெற்று நித்தியம், நைமித்திகம், காமிகம் என்னுங் கருமங்களைச் செய்து சாதனையினால் தம்மலமறுப்பவன்.  இம்மூவகையருஞ் சாமானியர் எனவும், விசேடர் எனவும் இருவகைப்படுவர்.
    4.ஆசாரியராவார் அம்மூன்று தீக்கைகளோடு ஆசாரியாபிடேகமும் பெற்றவர்.  அவரும் கிரியாகுரு ஞானகுரு என இருவகையர்.

--------------------------------------------------------------------------------
சல சுத்தி
    அநுட்டான சலத்தை ஓம் சிவாய நம என்று 5நிரீக்ஷண முத்திரையினாலே நிரீக்ஷணஞ் செய்து, ஓம் அஸ்திராயபடு என்று நிமிர்த்திய பதாகை முத்திரையினாலே புரோக்ஷணஞ் செய்து, ஓம் அஸ்திராயபடு என்று சுட்டுவிரலை நீட்டிய கையினாலே தாடனமும், ஓம் கவசாயவெளஷடு என்று கவிழ்ந்த பதாகை முத்திரையினாலே அப்பியுக்ஷணமும், வலக்கைப் பெருவிரலொழித்த விரல்களினால் இடவுள்ளங்கையிலே ஓம் அஸ்திராயபடு என்று மூன்றுதரந் தட்டுதலாகிய தாளத்திரயமுஞ் செய்து, ஓம் அஸ்திராயபடு என்று சோடிகை முத்திரையினாலே திக்குபந்தனமும், ஓம் கவசாய வெளஷடு என்று சுட்டுவிரல் நீட்டிய கையினாலே அவகுண்டனமுஞ் செய்து, ஓம் சிவாய வெளஷடு என்று தேனுமுத்திரையுங் கொடுக்க வேண்டும்.

--------------------------------------------------------------------------------
    5.நிரிக்ஷணமாவது சந்திரன், சூரியன், அக்கினி யென்னு மூவரும்முறையே வலக்கண்ணும், இடக்கண்ணும், நெற்றிக்கண்ணு மாவராதலால், வலக்கண்ணினாலே அதனை உலர்த்தினதாகவும், நெற்றிக்கண்ணினாலே தகித்ததாகவும், இடக்கண்ணினாலே அமுதங் கொண்டு நனைப்பதாகவும் பாவிப்பது.  புரோக்கணமாவது அங்ஙனம் நிரீக்கணஞ் செய்யப்பட்டது சுத்தியாதற் பொருட்டுத் தெளிப்பதாம்.  தாளத்திரயமாவது ஒருவன் கல்லையடிக்கும் போது அதனிடத்துப் பொறிதோன்றுமாறு போலச் சடமாகிய இந்தப் பதார்த்தத்தினிடத்துச் சித்துண்டாதற் பொருட்டுத் தட்டுவதாம்.  அப்பியுக்கணமாவது அந்தப் பதார்த்தத்தினிடத்துத் தோன்றிய சித்தினது பிரகாசமானது தன்னுடைய தானத்தைவிட்டு நீங்காமல் இருக்கும் பொருட்டு மூடுவதாம்.

--------------------------------------------------------------------------------
அஸ்திர சந்தியோபாசனம்
    அதன் பின்னர் ஓம் அஸ்திராயநம என்று நிமிர்த்திப் பதாகை முத்திரையினாலே சலத்துளியை மூன்றுதரஞ் சிரசின்மேலே தெளித்து, ஓம் அஸ்திராய சுவாகா என்று மூன்றுதரந் தருப்பனஞ் செய்து, ஓம் அஸ்திராய நம என்று பத்துத்தரஞ் செபித்து, ஓம் அஸ்திராய சுவாகா என்று மீட்டும் ஒருதரம் தருப்பனஞ் செய்க.
ஆசமனம்
    அதன்பின் தருப்பையினாலே செய்யப்பட்ட பவித்திரத்தையேனும், பொன் வெள்ளி யென்னு மிவகைளாற் செய்யப்பட்ட பவித்திரத்தையேனும் அநாமிகை விரவிற்றரித்து, வலக்கையை விரித்துப் பெருவிரலையுஞ் சிறுவிரலையும் பிரித்துவிட்டுப் பெருவிரலடியிற் சார்ந்த உழுந்தமிழ்ந்து, ஆன்மதத்துவம் இருபத்துநான்கும், வித்தியாதத்துவம் ஏழும், சிவதத்துவம் ஐந்துமாகிய முப்பத்தாறு தத்துவங்களுஞ் சுத்தியாகும் பொருட்டுச் சலத்திலே ஓம் ஆத்துமதத்துவாய சுவதா, ஓம் வித்தியாதத்துவாய் சுவதா, ஓம் சிவதத்துவாயசுவதா என்று பிரம தீர்த்தமாகிய அங்குட்டத்தின் (பெருவிரலில்) அடி அதரத்திலே படும்படி ஆசமனம் பண்ணி, ஓம் அஸ்திராயபடு என்று அதரங்களிரண்டையும் வலக்கையின் பெருவிரலடிகொண்டு இடமாக இரண்டுதரமும், உள்ளங்கை கொண்டு கீழாகஒருதரமுந் துடைத்துக் கைகழுவி, ஓம் இருதயாய வெளஷடு என்று பெருவிரலோடு கூடிய அணிவிரலினாலே முகம், வலமூக்கு, இடமூக்கு, வலக்கண், இடக்கண், வலக்காது, இடக்காது, நாபி, மார்பு, வலத்தோள், இடத்தோள், சிரசு என்னும் இப்பன்னிரண்டிடங்களையுந் தொட்டு விடுக.
    இங்ஙனமன்றிச் சிலர் ஓம் அச்சுதாய நம, ஓம் அனந்தாய நம, ஓம் கோவிந்தாய நம எனவும், சிலர், ஓம் கேசவாயஸ்வாகா, ஓம் நாராயணாயஸ்வாகா, ஓம் மாதவாயஸ்வாகா எனவும் உச்சரித்து ஆசமனஞ் செய்வர்.  இவை சிவாகமத்திற்கு மாறென்க.
    சிலர், ஓம் கேசவாய நம: என்று பெருவிரல் நுனியால் வலக் கபோலத்தையும், ஓம் நாராயணாய நம: என்று இடக் கபோலத்தையும், ஓம் மாதவாய நம: என்று இடக்கண்ணையும், ஓம் விஷ்ணவே நம: என்று சுட்டுவிரனுனியால் வலமூக்கினடியையும், ஓம் மதுசூதனாய நம: என்று இடமூக்கினடியையும், ஓம் திரிவிக்ரதாய நம: என்று சிறுவிரனுனியால் வலக்காதினையும், ஓம் வாமனாய நம: என்று இடக்காதினையும், ஓம் ஸ்ரீதராய நம: என்று நடுவிரனுனியினால் வலப்புயத்தையும், ஓம் இருஷிகேசாய நம: என்று இடப்புயத்தையும், ஓம் பத்மநாபாய நம: என்று கையைக் குவித்து நெஞ்சினையும் ஓம் தாமோதராயநம: என்று கையை விரித்துச் சிரத்தினையும் முறையே தொடுவதுமுண்டு.  இது சிவாகம விரோதமாம்.  ஸ்மார்த்த நிலையினர் முக்கியமாய் இதை யநுசரிக்கின்றனர்.  அங்ஙனமாயினும் இந்நாமங்கள் யாவும் பரம்பொருளாகிய சிவபெருமானுக்கே சிறப்பாவமைதல் "கேசவாதிநாம சிவபரத்துவ நிரூபணத்தாற்" போதரலின் பொருந்து மென்றலும் ஓன்றாகும்.
திருநீற்றின் அளவு
    பிராமணர் முதலிய நான்கு வருணத்தாரும் விபூதி தரிக்குமிடத்து, பிராமணர் ஒருகழஞ்சு விபூதியும், க்ஷத்திரியர் ஒன்றரைக் கழஞ்சும், வைசியர் இரண்டு கழஞ்சு விபூதியும், சூத்திரர் இரண்டரைக் கழஞ்சுங் கொள்ள வேண்டும்.  அவ்வவ் வருணத்துப் பெண்களும் இவ்வளவே கொள்ளக்கடவர்.  ஒருகழஞ்சு என்பது பன்னிரண்டு பணவெடையுள்ளது.
விபூதிசுத்தி
    அதன் பின்னர், விபூதியை வலக்கைப் பெருவிரல், நடுவிரல், அணிவிரல்களால் எடுத்து இடக்கையில் வைத்துக் கொண்டு, ஓம் அஸ்திராயபடு என்று விபூதியிலே சலத்தைத்  தெளித்து, அவ்விபூதியில் ஒரு சிறுபாகத்தைப் பெருவிரல்  அணிவிரல்களினாலே தொட்டு, ஓம் அஸ்திராய உம்படு என்று  இராக்ஷதர் பொருட்டு நிருதி மூலையாகிய தென்மேற்குத் திசையிற் றெறித்து, ஓம் சிவாயநம என்று நிரீக்ஷணஞ்செய்து, ஓம் அஸ்திராயபடு என்று புரோக்ஷண தாடனங்கள் பண்ணி ஓம் கவசாய வெளஷடு என்று அப்பியுக்ஷணமுஞ் செய்து, விபூதியை வலக்கையால் மூடிக்கொண்டு, ஓம் நிவிர்த்திகலாயை நம, ஓம் பிரதிஷ்டாகலாயைநம, ஓம் வித்தியாகலாயைநம, ஓம் சாந்திகலாயை நம, ஓம் சாந்தீயாதீதகலாயைநம என்னும் பஞ்சகலா மந்திரத்தையும், ஓம் ஈசானாய நம, ஓம் தற்புருஷாயநம, ஓம் அகோராய நம, ஓம் வாமதேவாயநம, ஓம் சத்தியோசாதாய நம, ஓம் இருதயாய நம, ஓம் சிரசேநம, ஓம் சிகாயை நம, ஓம் கவசாயநம, ஓம் நேத்திரோப்பியோநம, ஓம் அஸ்திராய நம என்னுஞ் சங்கிதா மந்திரம் பதினொன்றனையும் உச்சரித்து அபிமந்திரித்து, ஓம் கவசாயவெளஷடு என்று அவகுண்டனமுஞ் செய்யக்கடவர்.
விபூதி ஸ்நானம்
    அங்ஙனஞ் செய்த பின்பு, வலக்கையின் பெருவிரல் அணிவிரல்களால் விபூதித் தூளியை எடுத்து, ஓம் அஸ்திராய படு என்று தலை தொடங்கிக் காலளவும்பூசி, இடக்கையிலுள்ள விபூதியைப் பெருவிரலோடு கூடிய நடுவிரலினால் ஓம் இருதயாய நம என்று நீர்விட்டு, ஓம் கவசாயவெளஷடு என்று குழைத்து நடுவிரல் மூன்றினாலும், ஓம் ஈசானாயநம என்று உச்சியில் மூன்றுதரமும், ஓம் தற்புருடாயந்ம என்று நெற்றியில் மூன்றுதரமும், ஓம் அகோராய நம என்று நெஞ்சினில் மூன்றுதரமும், ஓம் வாமதேவாயநம என்று நாபியில் ஒரு தரமும், ஓம் சத்தியோசாதாய நம என்று முறையே வலமுழந்தாள், இடமுழந்தாள், வலப்புயம், இடப்புயம், வலமுழங்கை, இடமுழங்கை, வலமணிக்கட்டு, இடமணிக்கட்டு, வலவிலாப்புறம், இடவிலாப்புறம், முதுகு, கழுத்து என்னுமற்றை யிடங்களில் ஒவ்வொரு தரமுந் தரிக்கக்கடவர்.
    சிலர் சுவத்திகாசனமாக இருந்துகொண்டு, ஆசமனஞ் செய்து, விபூதியைக் கையில் வைத்துக்கொண்டு,
    ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தநம்
    உர்வாருக மிவபந்தனான் முர்த்யோர் முக்ஷயமாமி.
என்னு மந்திரத்தைச் சொல்லிச் சலம் விட்டுக் குழைத்து,
    ஓம் சத்யோசாதம் பிரபத்யாமி சத்யோஜாதாயவை நமோநம:
    பவேபவே நாதிபவே பவஸ்வமாம் பவோத் பவாயநம:
    வாமதேவாய நமோ ஜேஷ்டாய நமஸ்ரேஷ்டாய நமோ ருத்திராய நம:
    காலாய நம: கலவிகரணாய நமோ பலவிகரணாயநமோ
    பலாயநமோ பலப்ரமதனாயநமஸ் ஸர்வபூத தமனாயநமோ மனோன்மனாயநம:
    அகோரேப்யோத கோரோப்யோ கோரகோரதரேப்ய: ஸர்வேப்ய:
    ஸர்வசர்வேப்யோ நமஸ்தே அஸ்து ருத்ரரூபேப்ய:,
    தத்புருஷாய வித்மஹே மஹோதேவாய தீமஹீ தந்நோருத்ராய பிரசோதயாத்
    ஈசானஸ் ஸர்வவித்யானாம் ஈஸ்வரஸ் ஸர்வபூதானாம்
    ப்ரம்ஹாதிபதி ப்ரஹமணாதிபதி ப்ரம்ஹாசிவோமே
    அஸ்து ஸதாசிவோம்.
    என்னு மந்திரங்களைச் சொல்லித் தரிப்பவருமுளர்.
இங்ஙனம் நடுவிரல் மூன்றானுந் தரிக்குந் திரிபுண்டாம் திருநீற்றுமுத்திரையெனப் பெயர் பெறும்.  இதுவன்றிப் பெருவிரல், நடுவிரல், ஆழிவிரல் என்னு மூன்றாணுந் தரிப்பதே விசேடமாம்.  தரிக்கின் மகாபாதகங்கள் சூரியனைக்கண்ட பனிபோல் அகலுமென்க.  அதனை அநுலோமப் பிரதிலோமம் என்று கூறுவர்.  மூன்று குறிகளின் இடைவெளி ஒவ்வோரங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும்.  ஒன்றையொன்று தீண்டினும், மிக அகன்றிருப்பினும்,  வளைந்திருப்பினும் இடையில்லா விட்டாலும் குற்றமென்றறிக.  திரிபுண்டாம் விதித்த நீளத்தினின்றுங் குறைவுறுமாயின் ஆயுள் குன்றும்; மிகுமாயின் தவங்கெடும்.  செம்பு, வெள்ளி முதலிய உலோகங்களினாலே திரிசூலஞ் செய்து, அதனாலுந் தோள் முதலாய தானங்களில் விபூதி தரிப்பதுமுண்டு.  அங்ஙனந் தரிப்பவர் சிவலோகத்திலே ஒருகாலும் நீங்காது வாழ்ந்திருப்பார்கள்.  மற்றைய அவசிய காலங்களிற் றரிப்பவரும், நோயாளரும் "சிவசிவ" என்று நெற்றி முதலிய தானங்களிற் றரிக்கக்கடவர்.  தரிக்குங் காலத்து நிலத்திலே சிந்தாவண்ணந் தரிக்க.  எத்தனை யணுக்கள் பூமியில் விழுகின்றனவோ அத்தனை வருடம் இரெளரவ நரகத்தில் வருந்துவர்.  வாயைத்திறந்து கொண்டும், தலையசைத்துக் கொண்டும், பிறருடன் பேசிக்கொண்டும், பராமுகஞ் செய்துகொண்டும், சிரித்துக் கொண்டும், நடந்துகொண்டும், தலையைக் கவிழ்த்துக் கொண்டும், கண்ணாடி பார்த்துக் கொண்டுந் தரித்தல் குற்றமாம்.  ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனும் அணியற்க.  நிலத்திலே யொருகால் விபூதி சிந்துமாயின் அதனை யெடுத்து விட்டு அவ்விடத்தைச் சலத்தால் மெழுகவேண்டும் இங்ஙனந் தரித்த பின்னர்ச் செய்ய வேண்டியவற்றை யெல்லாஞ் செய்து கொள்ளக்கடவர்.  அக்கினியின்றி யாகம் நடவாவதது போல விபூதியின்றிச் சிவார்ச்சனை நடவாது.  விபூதியிடாதவர் முகத்தைக் கண்டால் நல்லோர் பஞ்சாக்ஷர மந்திரம் நூறுருச் செபிக்கக்கடவர்.
    அருமறை வேள்விக்கனலி னீறெடுத்துப்
        பிரணவத்தை யமைய வோதி
    யுரைபெறு பஞ்சப்பிரமத்தா லுச்சி
        நெற்றி யுரங்குய்யந் தாள்கள்
    வரன்முறை யேயினி தணிந்து
        பிரணவத்தாலுடன் முழுதும் வயங்கமண்ணி
    விரிதுகில் வேறொன்றணிந்து விளங்கு
        மறைமந்திரங்கள் விளம்ப வேண்டும்.
                        -இலிங்கபுராணம்.
    விபூதியைச் சாபால வுபநிடதத்திற் கூறப்பட்ட மந்திரங்களினால் உத்தூளனமாகத் தரித்துக் கொண்டு, பஞ்சப் பிரம முதலிய மந்திரங்களினாற் றிரியக்கு திரிபுண்டரமாக ஐந்து தானங்களிற் றரிப்பதுமுண்டு.   நால்வகை ஆச்சிரமத்தாருள் பிரமசாரி மேதாவி முதலிய மந்திரங்களையும், சந்நியாசி பிரணவ மந்திரத்தையும் உச்சரித்து ஓர்கால் திரிபுண்டரம் அணியினும் அணியலாம்.
    மேதாவிமுதன்மனுக்களாற்பிரமசாரிமெய்ப்பிரணவத்தா
    லோதார்வமுறச்சந்நியாசியுமுப்புண்டரநன்குறுத்தல்வேண்டும்.
                                        -சூதசங்கிதை.

for more details
விபூதியாற் பயனடைந்தவர்.
    திருநீற்றை இகழ்ந்த வங்கதேச ராசனாகிய புயபலன் என்பவன் தன் அரசாட்சியையும் மனைவியையுமிழந்து ஐயமேற்றுப் பின், பிராமணோத்தமரால் திருநீறிடப் பெற்றுப் பகைவரையும் வென்று, மனைவியையும் அரசியலையும் பெற்றனன்.  காஸ்மீர தேசத்திலிருந்த சுதர்மன் என்னும் பிராமணனும், அவன் தம்பியும் பிரம விஷ்ணுக்களைக் கடிந்து பேசியதனால் அவர்கள் ஊமையாகவும் முடவனாகவும் சாபமிட, அதனை விபூதிகொண்டு ததீசிமுனிவர் போக்கி நற்கதி யடைவித்தனர்.  நாரண மூர்த்தி இவ்விபூதியைத் தரித்து ஞானத்தை யடைந்ததன்றிப் பிரமனாகிய புத்திரனையும் பெற்றனர்.  திரிபுர மழிக்கு நிமித்தம் தேர்ச்சாரதியாக நின்ற பிரமன் சரசுவதி தேவியின் பிரிவை யாற்றதவனாய் இரங்கி வருந்த, எம்பரமன் பாரதி வடிவாய் நின்று பாண்டரங்கக் கூத்தாடி விபூதியை அவன் நெற்றியிலிட்டு மயக்கத்தைப் போக்கி யருளினர்.  சர்ப்பன், பஞ்சமேட்டி, அக்கினி யென்னு மூன்றசுரர்கள் தேவர்களை யெல்லாங் கொல்ல, வீரபத்திரக் கடவுள் அவ்விடத்துச் சென்று விபூதியைத் தூவி யவர்களை யெழுப்பினர்.  வாமதேவ முனிவரைக் கொல்வான் பிடித்த பிரமராக்கத னொருவன் அவரது திருநீறு பரவப் பூசிய தேக பரிசத்தினால் நல்லறிவும் திவ்விய தேகமும் பெற்றான்.  பரதார கமனத்தினால் துர்மரணமடைந்து நரகத்தின் மூழ்கிய பிராமணன் தன் பிரேதவுடலில் விபூதி பட்டதனால் சுவர்க்கத்தை யடைந்தனன்.  பின்னர்ச் சிவலோக முத்தியுங் கிடைக்கப்பெற்றனன்.  கவுணிய குலதீபமாய், தவ முதல்வராய், சமயகுரவராய் விளங்கிய திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் கூன்பாண்டியனது வெப்பு நோயைத் திருநீற்றினாற் றீர்த்தருளினர்.  முழுநீறு பூசிய முனிவர் எண்ணிறந்தோர் சிவசாயுச்சிய முத்தியை யடைந்தனர் என்று பெரியபுராணம், அகத்திய பக்தவிலாசம் முதலிய உண்மை நூல்கள் முழங்குகின்றன.  விபூதி தரித்த பேற்றினாலே இம்மை மறுமைப் பயனை யடைந்தவர்களின் தொகையை அளவிட்டறிதல் யாவர்க்கும் அரிதரிதேயாம்.
விபூதி தூஷண மறுப்பு
    சிலர், அந்தண சாதியிற் பிறந்துஞ் சிவசின்னமாகிய விபூதி ருத்திராக்கங்களை யிகழ்ந்து கோபி சந்தனமிட்டும், வாயில் மண்ணிட்ட மாயனைப் ப்ரம்பொருளாக மதித்து நெற்றியில் ஊர்த்துவபுண்டரமாகிய மண்ணையிட்டும், வேதாகம விரோதிகளாய், சிவநிந்தகராய், சிவனடியார் தூஷணராய், சிவசின்ன தூஷணராய் அதிபாதகத்திற்கு ஆளாகின்றனர்.  அந்தந்தோ! அவரறியாமைக்கென் செய்வோம்.  அவர்கள் சிவபெருமானை யிகழ்ந்து தக்கன் செய்த யாகத்திற் சேர்ந்து முன்னர்க் காலத்தில் விலாப்புடைக்க அவிப் பாகங்களை உண்ட பாவங் காரணமாகத் ததீசி மகாமுனிவர் இட்ட சாபத்தினாற் பூமியிற் பிறந்த சிவதூஷண சிவசமய தூஷண சிவதாச தூஷண சிவசின்ன தூஷண சிவாகம தூஷண அதிபாதகராய்ப் பிறந்த பாஷண்டர் வம்சத்திற் நிற்க, இவ்வுண்மைகளை யெல்லாம் அறியாத கிறிஸ்தவர்கள் "மாட்டுச் சாம்பர் பாவத்தைப் போக்குமா" என்றும், "இலந்தைக் காய்போன்ற உருத்திராக்கக் காய்கள் மோக்ஷத்தைக் கொடுக்குமா" என்றும், உங்கள் ஞானிகளாகிய பட்டினத்தடிகள் முதலாயினோரே "நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன" என்றின்னன போன்ற வாக்கியங்களால் நீறு உருத்திராக்கங்களாற் பிரயோசனமில்லை யென்றுங் கூறியிருக்கின்றனர் என்றும், நம்மவர்களை மருட்டித் திரிகின்றனர். அக்கிறஸ்தவர்கள் தமது பைபிலில் கூறப்பட்ட வாசகங்களையெல்லாம் மறந்து இவ்வாறு கூறுதல் பொருந்துமா? ஆகலால் சைவசமயிகள் யாவரும்பின் வருவனவற்றைக் கேட்டு அவர் தூஷணங்களை நிராகரித்தல் முக்கிய கடமையாம்.  அக்கிறிஸ்தவர்களது பைபில் நீற்றை யணியவேண்டும் எனவும், தேவனது முத்திரைகளைத் தரிக்கவேண்டும் எனவும், அவற்றாற் பாவம் நீங்கப்படும் எனவும் கூறுகின்றன.  அவை வருமாறு:-
எண்ணாகமம் - 19 - அதிகாரம். 5-9 வசனங்கள்
    "கடாரியின் தோலும் மாமிசமும் இரத்தமுஞ் சாணியும் எரிக்கப்படவேண்டும்.  சுசியாயிருக்கிறவ னொருவன் அந்தக் கடாரியின் சாம்பலைப் பாளயத்திற்குப் புறம்பேசுசியான ஒரு இடத்திலே கொட்டி வைக்கக்கடவன்.  அது இஸ்ரவேற் சந்ததியின் சபையார் நிமித்தஞ் சுசிசெய்யுஞ் சலத்தின்பொருட்டு வைக்கப்பட வேண்டும்.  அது பாவத்தைப் பரிகரிக்கும்."
எபிரேயர் - 9 - அதி. 13 - வச.
    "காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், கடாரியின் சாம்பலும் அசுசிப்பட்டவன் மேலே தெளிக்கப்பட்டுச் சரீர அசுசி நீக்கி அவனைச் சுத்திகரிக்கும்."
யாத்திராகமம் - 12 அதி, 22, 23, வச.
    "இஸ்ரவேலர் எகிப்து தேசத்தி லிருந்தபொழுது யெகோவா விதித்தபடி ஆட்டு இரத்தத்தினாலே தங்கள் தங்கள் வாசல் நிலைக்கா லிரண்டிலும், நிலையின் மேல்விட்டத்திலும் அடையாளமிட்டு வைத்தார்களென்றும், அந்தத் தேவவம்சத்தாரைக் கொல்லும்படி யெகோவாவாலனுப்பப்பட்ட தூதர் அவ்வடையாளமுள்ள விடுகளிற் போகாமல் அவ்வடையாளம் இல்லாத வீடுகளிற் போய் அங்குள்ள தலைப்பிள்ளைகளைக் கொன்றார்" என்றுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன.
வெளி - 9 அதி, 4 வச.
    "தேவனுடைய முத்திரையை நெற்றிகளில் தரியாத மனுடர்களை மாத்திரமே வருத்தப்படுத்துகிறதற்கு அவைகளுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது."
    இங்ஙனஞ் சொல்லப்பட்டிருக்கவும் கிறிஸ்தவர்கள் அநியாயமாகத் தூஷித்துத் திரிதல் பாவமேயாம்.  சிவத்தின் அறிகுறியாகவுள்ள விபூதி ருத்திராக்கங்களைச் சைவர்கள் அணிதல் அறியாமையும் பயனின்மையுமாய் முடியுமெனின், கிறிஸ்தவர்கள் கோதுமை அப்பத்தையும் திராட்ச ரசத்தையும் முறையே இயேசுக் கிறிஸ்துவின் மாமிசமாகவும், இரத்தமாகவும், அல்லது அவைகளுக்கு அறிகுறியாகவேனும் பாவித்து உட்கொண்டு வருவது அறிவும் பயனுமாமா? இங்ஙனனே மத்தேயு 26-ம் அதிகாரம் இருபத்தாறாம் இருபத்தெட்டாம் வாகனங்களில் "யேசு அப்பத்தை யெடுத்துத் துதிசெய்து அதனைப்பிட்டுச் சீஷருக்குக் கொடுத்து நீங்கள் எடுத்துப் புசியுங்கள்; இதுவே என்சரீரமென்றார்" எனவும், பின்பு பாத்திரத்தையும் எடுத்துக் கொடுத்து நீங்கள் எல்லாரும் இதிற் பானம் பண்ணுங்கள்.  இதுவே புதிய உடன்படிக்கைக்கேற்ப, பாவமன்னிப்புக் கென்று அநேகருக்காகச் சிந்தப்படுகின்ற என்னுடைய இரத்தமென்றார் எனவுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.  இப்படியே கிறிஸ்துவினாலே அப்பமுந் திராட்ச ரசமும், மாமிசமாகவும், இரத்தமாகவும் விசேஷமடைந்தன வென்று பைபிலிலேயே காணப்படுகின்றன.  அவ்வாறே கிறிஸ்தவர்களும் அவை இரண்டனையும் ஒப்பி இராப்போசனமென்று பீடத்தின்மேல் வைத்து மாமிசமாகவும் இரத்தமாகவும் பாவித்து உட்கொள்கின்றனர்.  அங்ஙனமாயவர்கள் சிவத்துவப் பேற்றிற்கும் திருவருட் பேற்றிற்கும் அறிகுறியாக நம்பெருமானாற் கொடுக்கப்பட்டு அணியப்பட்டுவருஞ் சிவசின்னங்களைத் தூஷித்தல் யாதாய் முடியும்? சிலுவைக்குறியைக் கழுத்தில் தரித்திருப்பதும், வீடுகள், பிரதிமைகள், சிகரங்கள், சுடுகாடு முதலியவற்றில் அதனை காட்டுதலும் அவையாமா? இவற்றைச் சிந்தித்து அடங்காது நிந்தித்தல் தாயைப்பழித்து மகள் குற்றத்துக்குள்ளாய தன்மை போலுமாம்.
    பட்டினத்தடிகள் முதலாய சிவஞானிகள் சொல்லியவற்றிக்குச் சமாதானமாக உண்மைப் பொருளைக் கூறுவாம்.  பட்டினத்தடிகளூக்கு விபூதி தரித்தல் பிரயோசனமில்லை யென்பது கருத்தாயின், அவரே பின்னரும் "ஐயுந் தொடர்ந்து" என்னுஞ் செய்யுளில், "செய்யுந் திருவொற்றியூருடையீர்திரு நீறுமிட்டுக் - கையுந் தொழப்பண்ணியஞ் செழுத் தோதவுங் கற்பியுமே" எனவும், "ஊரீருமக்கோ ருபதேசங் கேளு முடம்படங்கப் - போரீர் சமணைக் கழுவேற்று நீற்றை" எனவும், "நாய்க்குண்டு," என்னுஞ் செய்யுளில், "மதி யாமல்வரும் - பேய்க்குண்டு நீறு" எனவும், "உரைக்கைக்கு நல்ல திருவெழுத் தைந்துண்டுரைப்படியே செருக்கித் தரிக்கத் திருநீறுமுண்டு" எனவும் கூறியருளியது என்னையோ? மற்றைய சிவஞானிகள் வாக்கியமும் இப்படியே இருக்கும்.  இப்படி யிரண்டையும் ஒருவர் தாமே திருவாய் மலர்ந்தருளினமையால் அவைகள் ஒன்றை யொன்றழிக்க மாட்டாவாம்.  அவைகட்குச் சமாதானமிருக்கின்றது.  அவ்வுண்மையைக் கேட்டு அறியாமல் எங்கேயாயினும் ஒரு செய்யுளை யெடுத்துப் படித்து, இப்படிச் சொல்லியிருக்க நீங்கள் செய்வது தவறு தவறு என்று சொல்வது அறியாமையாம்.  மருந்துண்பவ னொருவன் வைத்திய சாத்திரத்தில் விதித்தவாறே அநுமானத்தோடு உண்ணாமையையும், அவபத்தியங்களைத் தள்ளிப் பத்தியங்களைக் கொள்ளாமையையும், வைத்திய சாத்திரம் வல்லானொருவன் கண்டிரங்கி, நீ உண்ணும் இம்மருந்தினாற் பயன் யாது என்றக்கால் அவற்கு அம்மருந்து உண்ணக் கூடாது என்பது கருத்தாகுமோ? அன்றே.  அதுபோல மலபரிபாகம் வரும்படி கிரியைகளைச் செய்வோர் சிவசாத்திரத்தில் விதித்தவாறே அன்போடு செய்யாமையையும், கொலைமுதலிய பாவங்களைத் தள்ளி இரக்கம் முதலிய புண்ணியங்களைக் கொள்ளாமையையும் சிவசாத்திரம் வல்லார் கண்டிரங்கி, நீர்செய்யும் இக்கிரியைகளாற் பயன்யாது என்றக்கால்.  அவர்க்கு அக்கிரியைகள் செய்யற்க வென்பது கருத்தாமோ? அன்றே அங்ஙனமே விபூதிருத்திராக்க தாரணஞ் செய்வோர் அன்புடன் செய்யாமைகண்டு அதனாற் பிரயோசனமில்லையெனின், அவர்க்கு அது செய்யவேண்டாமென்பதுகருத்தோ? இல்லை! இல்லை!! இதனைக் கிறிஸ்தவர்களும் அறிந்து அடங்குவாராக.
விபூதி தத்துவம்
    பசுவின் மலத்தை அக்கினிகொண்டு தகித்தலால் உண்டாகியது திருநீறெனலால், அதனுண்மையை யறியுமிடத்து ஞானம் பயக்கு மென்பது விளங்கும்.  எங்ஙனமெனில் பசு என்பதற்குப் பந்திக்கப்படுவது என்பது பொருள்.  எனவே பசு என்பதனால் ஆணவம் கன்மம் மாயை யென்னு மும்மலங்களானும் பந்திக்கப்பட்ட ஆன்மா என்பது குறிக்கப்படும். அதன் மலமாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களையும் சிவஞானமாகிய அக்கினி கொண்டு தகித்தலால் உண்டாகுஞ் சிவத்துவப் பேற்றைத் தரிப்பவர் யாவரோ அவர் முத்தியடைவார் என்னுமுண்மையும் அறியப்படும்.  அன்றியும் நேராக வருகின்ற கங்கையைப் போல விளங்கும்படி வெண்ணிற முடைத்தாக நெற்றியினிடத்திற் றிரிபுண்டரமாக (முக்குறியாகத்) தரித்திருக்கும் விபூதியானது, காமம் வெகுளி மயக்கம் என்னு முக்குற்றங்களையும், சாத்துவிகம் இராசதம் தாமதம் என்னு முக்குணங்களையுங் கெடுத்து, ஞானவெற்றி யுண்டாக உயர்த்தப்பட்ட மூன்றுகொடிகள் போலவும் விளங்காநிற்கும், இவையன்றிச் சகசீவபரம் என்னுந் திரிபுடிகளையும், உலகவீடணை, தனவீடணை, புத்திர வீடணை என்னும் ஈடணாத்திரவியங்களையும், பிராரத்துவம், சஞ்சிதம் ஆகாமியம் என்னும் முவினைகளையும், சந்தேகம் விபரீதம் மயக்கம் என்னும் மூன்றுபுத்திகளையும், தூலம் சூக்குமம் காரணம் என்னும் மூவுடம்புகளையும், சரியை கிரியை யோகம் என்னும் முச்சாதனங்களையும், மேல் கீழ் மத்தி என்னும் மூவுலகங்களையும், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலத்தையும், தன்மை முன்னிலை படர்க்கை யென்னும் மூவிடச் சுட்டினையும், சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி யென்னும் மூன்றவத்தைகளையும், பிரமலோகம், விஷ்ணுலோகம் உருத்திரலோகம் என்னும் முப்பதவிகளையும், சிவசாலோக்கியம் சிவசாமீப்பியம் சிவசாரூப்பியம் என்னு மும்முத்திகளையும், காலம் தேசம் வஸ்து என்னும் முப் பரிச்சேதங்களையும், செய்தல் செய்வித்தல் உடன்படல் என்னும் பாவபுண்ணிய வழக்கம் மூன்றனையும், வாதம் பித்தம் சிலேத்துமம் என்னும் முப்பிணிகளையும், சுசாதிகம் விசாதிகம் சுகதம் என்னும் முப்பேதங்களையும், மனம் வாக்கு காயம் என்னுந் திரிகரணங்களையும், உத்தேசம் இலக்கணம் பரீக்கை என்னும் போதப் பிரகாரங்களையும், அம்மை இம்மை உம்மை என்னும் முப்பிறப்பினையும்நீக்கி நின்று மேல்நிலையாய பெரும்பேற்றைத் தெரிவிக்குங் குறி என்று தெளியவும்படும்.
    நீற்றுக் கொடிபோ னிமிர்ந்து காட்டியும்.
                                -திருவாசகம்.
    உற்று நேரென வருந்திரி பதகை போலொளிர்
    நெற்றி மேலவ ரிடுந்திரி புண்டர நீறு
    குற்ற மூன்றையுங் குணமொரு மூன்றையுங் குலைத்து
    வெற்றி யாகவே யுயர்த்தமுப் பதாகைபோல் விளங்கும்.
                                -திருவிரிஞ்சைப் புராணம்
    ஆதி பகவன் ஞான வடிவழலிற் பூத்து நித்தியமா
    யணிந்தோர் தமக்கு வசிகரமா யருந்தினோர்கட் காரமுதாய்
    நீதி யறியும் பசுமலத்தை நீக்குமொருநற் குறிகாட்டி
    நிகழ் பேரின்பக் கடலூட்டி நின்ற புகழ்வெண் டிருநீறே.
                                -திருப்போரூர்ச் சந்நிதிமுறை.
********
 
for more details
visit www.geocities.com/kathirvelpillai
Nature of Holy Ash
142. What are the first Saivite emblems which it is essential that Saivites should wear on their bodies?
    They are two , namely "vibhuthi" (holy ash) and "rudraksha" seed.
143. What is "vibhuthi" (holy ash)?
    The ash obtained by burning cow-dung is holy ash.  Vibhuthi has also the names pasitham, pasumam, shaaram and raksha.
144. What is the colour of the holy ash which is proper to be worn?
     It is holy ash which is white in colour which is proper to be worn.  Holy ash which is dark or reddish or smokish or golden in colour should not be worn.
145. In what manner should the holy ash be taken and kept?
    It should be taken and percoalated in a new piece of cloth and then placed inside a new vessel, and fragrant flowers like jasmine, jasminum, trichotomum (mullai), trumpet-flower (paathiri), and small champaca should be placed inside and the mouth (of the vessel) should be closed with a new piece of cloth.
146. Inside what should the holy ash be kept and worn?
    The holy ash would be taken and kept inside a silk pouch or a tiny box or the shell of a "vilva" fruit or the shell of a gourd and then worn.  Holy ash which is not taken and kept in a receptacle should not be worn. 147. Seated facing what direction should the holy ash be worn?
   It should be worn seated facing north or facing east.
148. How should holy ash be worn?
  It should be worn with the three middle fingers of the right hand and without dropping on the ground but looking up and uttering "Sivasiva".  Besides that manner, it can also be worn by the middle finger and fore finger drawing from left(to right) and the thumb drawing from right (to left).  It should not be worn shaking the head or looking down.  It should not be worn with one finger or one hand.
149. What should be done if the holy ash drops on the ground?
  The holy ash which has dropped should be removed and the place should be cleaned.
150. Before whom and on what occasions should holy ash not be worn?
  It should not be worn before base persons, sinners at dirty land, when walking, and when lying down.
151. At what times is it essential to wear holy ash?
   It is essential to wear holy ash at dawn, noon and dusk, sunrise, sunset, immediately after taking a bath, before and after pooja, before and after taking a meal, before and after sleeping, after ablutions, when touched by a person who has not taken deeksha and when touched by a cat, a crane or a rat, etc.
152. To what can the face of a person who is not wearing holy ash be compared?
  It is comparable to a cremation ground.  Therefore, it is only after wearing holy ash that one should go out.
153.  How should one receive and wear holy ash when it is offered by an aachaariyaar or a devotee of Siva?
  One should prostrate oneself thrice or five times, arise, stretch out both hands and receive and wear the holy ash and one should once again prostrate oneself as before.
154. What kind of holy ash should not be worn?
      Holy ash received with one hand or purchased or given by a person who has not obtained Siva deeksha should not be worn.
155. How should one stand when one puts on holy ash when one is in front of a Deity or a holy fire or a guru or a devotee of Siva?
    One should stand turning one's face and wear the holy ash.
156. What should one do if the holy ash which has been applied to the Deity is brought by any person?
    If the person who brought it is of a higher status than oneself by deeksha, etc., one should prostrate oneself before him and receive the holy ash and wear it.  If that person is not of such a status one should, make him place the holy ash in a receptacle and then one should say prayers placing auspicious flowers on it, prostrate oneself before it and then take it and wear it.
157. How many modes of wearing the holy ash are there?
    There are two, namely, "uththoolanam" (wholly besmearing, e.g., the forehead) and "tripundaram".
158. What is "tripundaram"?
   Wearing (the holy ash) as three lines.
159. How should the three-line mode be worn?
    The lines should not be crooked or broken or touch each other, should not be too wide and should have a space of one inch between them.
160. At what places (on the body) is it proper to wear according to the three-line mode?
    There are sixteen, namely head, forehead, chest, navel, two knees, two shoulders, two elbows, two wrists, two rib-sides, back and neck.  It also happens that the two rib sides are excluded and the two ears are included.  It also happens that the elbows and wrists are excluded and then there are only twelve places.
161. When the holy ash is worn in the three-line mode, is there a rule that the lines should be or particular lengths at particular places?
    Yes, it should be worn for the length of the ends of the two eyebrows on the forehead, for six inches in length on the chest and the shoulders and for one inch in length at the other places.  If these lengths are increased or reduced it is wrong.
162.  Can all persons at all times mix holy ash with a little water and wear it?
    Persons who have obtained deeksha can mix the holy ash in a little water and wear it at dawn, noon and dusk.  At other times they must wear it without mixing it in water. Those who have not obtained deeksha, if they wear the holy ash after 12 noon, should wear it without mixing it in water.
163.  What does the wearing of holy ash symbolise?
    It symbolises the attainment of Sivahood by the removal of the bonds (paasam) by the bonds being burnt by the fire of jnana.
Thiruchchittampalam.

horizontal rule

for more details
visit
Dear Sir
 
Ladies who have taken Shiva Deeksha can wear Viputhi by mixing with water.
 
Question answer part written by Sri Arumuga Navalar in Tamil
 
விபூதி இயல்
1. சைவசமயிகள் ஆவசியமாகச் சரீரத்திலே தரிக்கற் பாலனவாகிய சிவசின்னங்கள் யாது?
   விபூதி, உத்திராக்ஷம் என்னும் இரண்டுமாம்.
2. விபூதியாவது யாது?
   பசுவின் சாணத்தை அக்கினியாலே தகித்தலால் உண்டாகிய திருநீறு, விபூதியின் பெயர்: பசிதம், பசுமம், க்ஷரம், இரக்ஷ.
3. எந்த நிற விபூதி தரிக்கத் தக்கது?
   வெண்ணிற விபூதியே தரிக்கத் தகும்; கருநிற விபூதியும், செந்நிற விபூதியும், புகைநிற விபூதியும், பொன்னிற விபூதியுந் தரிக்கலாகாது.
4. விபூதியை எப்படி எடுத்து வைத்துக்கொள்ளல் வேண்டும்?
   புது வஸ்திரத்தினாலே வடித்தெடுத்துப் புதுப் பாண்டத்தினுள்ளே இட்டு, மல்லிகை, முல்லை, பாதிரி, சிறுசண்பகம் முதலிய சுகந்த புஷ்பங்களை எடுத்து அதனுள்ளே போட்டுப், புது வஸ்திரத்தினாலே அதன் வாயைக் கட்டி வைத்துக்கொள்ளல்  வேண்டும்.
5. விபூதியை எதில் எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்?
   பட்டுப் பையிலேனும், சம்புடத்திலேனும், வில்வக் குடுக்கையிலேனும், சுரைக் குடுக்கையிலேனும்  எடுத்து வைத்துக்கொண்டு தரித்தல் வேண்டும்.  குடுக்கைகளினன்றிப் பிறவற்றில் உள்ள விபூதியைத் தரிக்கலாகாது.
6. விபூதியை எந்தத் திக்குமுகமாக இருந்துகொண்டு தரித்தல் வேண்டும்?
   வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும் இருந்து கொண்டு தரித்தல் வேண்டும்.
7. விபூதியை  எப்படி தரித்தல் வேண்டும்?
   நிலத்திலே சிந்தா வண்ணம் அண்ணாந்து 'சிவசிவ' என்று சொல்லி, வலக்கையின் நடுவிரல் மூன்றினாலும் நெற்றியிலே தரித்தல் வேண்டும். இப்படியன்றி, நடுவிரல் ஆழிவிரல்களினால் இடப்பக்கந் தொடுத் திழுத்துப் பெருவிரலிரலினால் வலப் பக்கந் தொடுத் திழுத்துத் தரித்தலுமாம்.  வாய்ங்காந்து கொண்டும், தலை நடுங்கிக் கொண்டும், கவிழ்ந்து கொண்டுந் தரிக்கலாகாது.  ஒரு விரலாலேனும் ஒரு கையாலேனுந் தரிக்கலாகாது.
8. விபூதி நிலத்திலே சிந்தினால் யாது செய்தல் வேண்டும்?
   சிந்திய விபூதியை  எடுத்து விட்டு, அந்தத் தலத்தைச் சுத்தம் செய்தல் வேண்டும்.
9. எவ்வெவர் முன் எவ்வெப்பொழுது விபூதி தரிக்கலாகாது?
   சண்டாளர் முன்னும், பாவிகண் முன்னும், அசுத்த நிலத்தும், வழிநடக்கும் போதும், கிடக்கும் போதுந் தரிக்கலாகாது.
10. எவ்வெக் காலங்களிலே விபூதி ஆவசியமாகத் தரித்துக்கொள்ளல் வேண்டும்?
   சந்தியாகால மூன்றினும், சூரியோதயத்தினும், சூரியாஸ்தமயனத்தினும், ஸ்நானஞ் செய்தவுடனும், பூசைக்கு முன்னும் பின்னும், போசனத்துக்கு முன்னும் பின்னும், நித்திரைக்கு முன்னும் பின்னும், மலசல மோசனஞ் செய்து செளசம் பண்ணி ஆசமித்த பின்னும், தீக்ஷ யில்லாதவர் தீண்டிய போதும், பூனை, கொக்கு, எலி முதலியன தீண்டிய போதும், விபூதி ஆவசியமாகத் தரித்தல் வேண்டும்.
11. விபூதி தரியாதவருடைய முகம் எதற்குச் சமமாகும்?
    சுடுகாட்டுக்குச் சமமாகும்; ஆதலினால் விபூதி தரித்துக்கொண்டே புறத்திற் புறப்படல் வேண்டும்.
12. ஆசாரியராயினும், சிவனடியாராயினும் விபூதி தந்தால், எப்படி வாங்கித் தரித்தல் வேண்டும்?
   மூன்று தரமாயினும், ஐந்து தரமாயினும் நமஸ்கரித்து, எழுந்து கும்பிட்டு, இரண்டு கைகளையும் நீட்டி வாங்கித் தரித்துக்கொண்டு, முன்போல மீட்டும் நமஸ்கரித்தல் வேண்டும்.
13. எப்படிப்பட்ட விபூதி தரிக்கலாகாது?
   ஒரு கையால் வாங்கிய விபூதியும், விலைக்குக் கொண்ட விபூதியும், சிவதீக்ஷயில்லாதார் தந்த விபூதியுந் தரிக்கலாகாது.
14. சுவாமி முன்னும், சிவாக்கினி முன்னும், குரு முன்னும், சிவனடியார் முன்னும் எப்படி நின்று விபூதி தரித்தல் வேண்டும்?
   முகத்தைத் திருப்பி நின்று தரித்தல் வேண்டும்.
15. சுவாமிக்குச் சாத்தப்பட்ட விபூதிப் பிரசாதம் யாவராயினுங் கொண்டுவரின், யாது செய்தல் வேண்டும்?
   கொண்டு வந்தவர் தீக்ஷ முதலியவற்றினாலே தம்மின் உயர்ந்தவராயின், அவரை நமஸ்கரித்து வாங்கித் தரித்தல் வேண்டும்; அப்படிபட்டவரல்லராயின், அவ்விபூதிப் பிரசாதத்தை ஒரு பாத்திரத்தில் வைப்பித்து, அதனைப் பத்திர புஷ்பங்களால் அருச்சித்து நமஸ்கரித்து எடுத்துத் தரித்தல் வேண்டும்.
16. விபூதிதாரணம் எத்தனை வகைப்படும்?
    உத்தூளனம், திரிபுண்டரம் என இரண்டு வகைப்படும்.
( உத்தூளனம் = திருநீறுபூசுதல்)
17. திரிபுண்டரமாவது யாது?
    வளையாமலும், இடையறாமலும், ஒன்றை ஒன்று தீண்டாமலும், மிக அகலாமலும், இடைவெளி ஒவ்வோரங்குல வளவினாதாகத் தரித்தல் வேண்டும்.
18. திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானங்கள் யாவை?
   சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப் புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறுமாம்.
    இவைகளுள், விலாப் புறம் இரண்டையும் நீக்கிக் காதுகள் இரண்டையும் கொள்வதும் உண்டு.  முழங்கைகளையும் மணிக்கட்டுகளையும் நீக்கிப் பன்னிரண்டு தானங் கொள்வதும் உண்டு.
19. திரிபுண்டரந் தரிக்குமிடத்து இன்ன இன்ன தானங்களில் இவ்வளவு இவ்வளவு நீளந் தரித்தல் வேண்டும் என்னும் நியமம் உண்டோ?
    ஆம்; நெற்றியில் இரண்டு கடைப்புருவ வெல்லை நீளமும், மார்ப்பிலும் புயங்களிலும் அவ்வாறங்குல நீளமும், மற்றைத் தானங்களில் ஒவ்வொரங்குல நீளமும் பொருந்தத் தரித்தல் வேண்டும்.  இவ்வெல்லையிற் கூடினும் குறையினுங் குற்றமாம்.
20. எல்லோரும் எப்பொழுதும் விபூதியைச் சலத்திற் குழைத்துத் தரிக்கலாமா?
   திக்ஷயுடையவர் சந்தியாகால மூன்றினுஞ் சலத்திற் குழைத்துத் தரிக்கலாம்; மற்றைக் காலங்களிற் சலத்திற் குழையாமலே தரித்தல் வேண்டும்.  தீக்ஷ இல்லாதவர் மத்தியானத்துக்குப் பின் சலத்திற் குழையாமலே தரித்தல் வேண்டும்.
21. விபூதிதாரணம் எதற்கு அறிகுறி?
    ஞானாக்கினியினாலே தகிக்கப்பட்ட பசுமல நீக்கத்தில் விளங்குஞ் சிவத்துவப் பேற்றிற்கு அறிகுறி.
திருச்சிற்றம்பலம்