Pillai in Cinema Pillai Web Sites Ceremonies Home
புதுமைப்பித்தன் வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர்: சொ.விருத்தாசலம் Real Name : So. Viruthasalam
தந்தை பெயர்: சொக்கலிங்கம் பிள்ளை Father Name : Sokkalingam Pillai
DOB: பிறப்பு: 25,ஏப்ரல் 1906
பிறந்தவிடம்: திருப்பாதிரிபுலியூர் ( கடலூர் 1) Birth Place :Near Kadalur
பூர்வீகம்: நெல்லை Native : Tirunelveli
தொடக்கக் கல்வி: செஞ்சி,திண்டிவனம் மற்றும் கள்ளக்குறிச்சி
உயர்நிலைப்பள்ளி: யோவான் பள்ளி,நெல்லை
பட்டம் : இந்து கல்லூரி,நெல்லை -1931 ல் இளங்கலை பட்டம்
திருமணம்: 1932ல்,மனைவி பெயர் கமலா
முதல் வெளியீடு: ஒக்டோபர் 18,1933 - குலோப்ஜாமுன் காதல்
மணிக்கொடி: 1934 ஏப்ரலிலிருந்து மணிக்கொடியில் பல கதைகள்,கட்டுரைகள் வெளிவந்தன
குடிபெயர்தல்: 1934ல் சென்னைக்கு
1935 வரை ஊழியனில் உதவியாசிரியராக பணிபுரிந்தார்.1935 ஜுலை தொடங்கி 1943 செப்டெம்பர்
வரை தினமணியில் உதவியாசிரியாரக பணிபுரிதல்.1939ல் உலகத்துச் சிறுகதைகள்,பேஸிஸ்ட்
ஜடாமுனி,கப்சிப் தர்பார் ஆகியவை வெளிவந்தன.194ல் முதல் சிறுகதைத் தொகுதி
“புதுமைப்பித்தன் கதைகள்” நவயுகப் பிரசுராலயத்தால் வெளியிடப்பட்டது.1944ல்
டி.எஸ்.சொக்கலிங்கம் தொடங்கிய தினசரியில் சேர்ந்து பின் விலகித் திரைப்படத் துறையில்
நுழைந்தார்.1946ல் ஜெமினியின் ‘அவ்வை,’காமவல்லி’ படங்களுக்கு பணிபுரிந்த பின்
பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.தியாகராஜ
பாகவதரின் ராஜமுக்தி படத்திற்காக புனேயில் இருந்த போது காசநோய்க்கு ஆளானார். மே
1948ல் திருவனந்தபுரத்திற்கு திரும்பி,ஜூன் 30 அன்று மறைந்தார்.